பக்கம் எண் :

174தமிழர் வரலாறு-2

"Compare Cymri (Wales). "It is stated that theoriginal home of the Cwmry. Cumri or Cymry, was in the Southern Hisdustan, theSouthern extremity of which, Cape Comorin, takes its name from the sameroot." - From a Historical Souvenir issued on the occassion of the meetingof the British Medical Association at Swansea 1903 - Editors."

என்று கனம் வயற்று ஐயரும் (Rev.J.L. Wyatt, M.A.) (T.)இராமகிருட்டிண பிள்ளையும் (B.A.)குறித்திருத்தலைக் கூர்ந்து நோக்குக.

"பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும்வேந்தலைக்கும்
கொல்குறும்பும்" 

(குறள்.735)

தமிழ்நாட்டில் மிக்கிருப்பதால்,அவற்றையெல்லாம் நீக்கி, எவருக்கும் அஞ்சாதுநடுநிலையில் நின்று முன்னோர் முறையில் தமிழைவளர்த்ததற்கு, 1969ஆம் ஆண்டு உலகத் தமிழ்க் கழகம்தோற்று விக்கப்பட்டுள்ளது. உண்மைத் தமிழன்பர்அனைவரும் உடனே அதில் உறுப்பினராகச் சேர்க.

பெரும் புலமையும் தமிழ்ப்பற்றும்இல்லாதவர், தம் பெயர் விளம்பரத்தின்பொருட்டே, பொதுப் பணத்தை ஏராளமாக வீண் செலவுசெய்து கூட்டித் தமிழைக் கெடுக்கும் உலகத்தமிழ்க் கருத்தரங்கு மாநாடுகட்கு, இனிமேலாயினும்தமிழக அரசு தன் ஒத்துழைப்புதவியை நல்காதுவிழிப்பாயிருக்க.


2. மொழியின வுணர்வும் படிமுறைக் கலப்பும்

இந்தியாவில், சிறப்பாகத்தமிழ்நாட்டில், இன்றுள்ள பிறவிக் குலங்கள் பிறநாடுகளில் இல்லாவிடினும், செல்வநிலை, பட்டம்,தொழில், மதம், கட்சி, பழங்குடி என்பனபற்றியபொதுவகையான வகுப்புகள் இருக்கின்றன. இருப்பினும்,அவையெல்லாம் நாட்டுமொழி வகையில் ஓரினமாய்ஒன்றுபட்டுவிடுகின்றன. ஒரு நாட்டிற் பன்மொழியினங்கள் தனித்தனிப் பெருந்தொகை மக்களைக்கொண்டிருப்பின், அப் பன்மொழிகளும் அங்குநாட்டுமொழி களாகச் சமநிலையடைகின்றன.தமிழ்நாட்டிலோ, ஆரிய வழியினருக் கும் தமிழேதாய்மொழியா யிருந்தும், அவரது இரண்டகத்தாலும்,அவர்க்கடிமைப்பட்ட அரசியற் கட்சியாளரின்பேதைமையாலும், வேற்று மொழிகளே போற்றப்பட்டுநாட்டுமொழி தூற்றப்படு கின்றது. இக் கேட்டுநிலைஎவ்வகையிலும் உடனே மாற்றப்படல் வேண்டும்.அல்லாக்கால், தமிழ் வாழவும் தமிழன் முன்னேறவும்எள்ளளவும் இடமில்லை.

கடந்த மூவாயிரம் ஆண்டாகத்தமிழருள்ளத்தில் ஊட்டப்பட்ட ஆரிய நஞ்சைத்திடுமென்று வெளியேற்ற முடியாதாதலின்படிப்படியாகத்தான் தமிழர் குமுகாயம்திருந்திவரல் வேண்டும்.