எகிபதிய அரசாட்சி, 31 ஆள்குடிகள் (Dynasties)தொடர்ந்து, தோரா. கி.மு. 3100-லிருந்து தோரா. கி.மு.335 வரை இருந்து வந்தது. அதன்பின், கி.மு. 332-ல்மக்கதோனியப் பேரரசனான மா அலெக சாந்தர்எகிபதுவைக் கைப்பற்றினான். தொன்மையில்,எகிபதுவும் சுமேரியாவும் ஏறத்தாழச் சமமாகும். ஆப்பிரிக்காவின்தென்பாகத்தினின்றும் மேலையாசியா வினின்றும்அடுத்தடுத்துச் சென்ற மக்கட்கூட்டத்தாரே,நீலாற்றின் பள்ளத்தாக்கிலுள்ள சதுப்புநிலங்களையடுத்த தாழ்நிலங்களை, நாலாயிரம் ஆண்டாக மெள்ளமெள்ளத் திருத்திக் குடியிருந்தனர் என்று எகிபதுநாட்டு வரலாறு கூறுகின்றது. அந் நாட்டிற்கும்இந்தியாவிற்கும் தொன்றுதொட்டு வணிகத்தொடர்பிருந்ததாக, வரலாற்று ஆராய்ச்சியாளர்கூறுகின்றனர். "ஆசியாவினின்று கடல் வழியாக,முதற் குடியேற்றக் கூட்டத் தார் கி.மு. 3000-ற்குப்பிற்படாது கிரேக்க நாட்டிற்குச் சென்ற போதே,மெசொப்பொத்தாமியாவில் ஊர் நாகரிகம்முழுவளர்ச்சி யடைந்திருந்தது. அவர்கள்,செப்பறைத் தீவிலும் (Cyprus)கிரேத்தாத் தீவிலும் (Crete)சில சைக்கிலேடுகளிலும் (Cyclades),கிரேக்கத் தீவக் குறையில் மேற்குப் பாகத்தைவிடவெப்பமாகவும் காய்ந்துமிருந்த கிழக்குப்பாகத்திலும் குடியேறினார்கள். அன்று அவர்கள்பயிர்த்தொழிலிலும் கடற்செலவிலும் முல்லைவாழ்க்கையிலும் பயின்றிருந்தனர். ஆயினும்,அன்றும் அவர்கள் புதுக் கற்கால நிலையிலேயேயிருந்தனர். ஏனெனின், அவர்கள் கருவிகள்கல்லாலும் பெரும்பாலும் மெலோசுத் (Melos)தீவிற் கிடைத்த புட்டிக்கண்ணாடி போன்ற எரிமலையுறைகூழாலுமே (obsidian)செய்யப்பட்டிருந்தன. தோரா. கி.மு. 2600 ஆன கிரேக்கஉறைக்காலத் தொடக்கத்தில் (சில ஆசிரியர்உறைக்காலத்தைச் செம்புக்கால மென்றும் சரியானஉறைக்காலமென்றும் பிரித்து, அதன்தொடக்கத்தைத் தோரா. கி.மு. 2900 என்றும் முந்தியதாக்குவர்.), செம்பைப் பயன்படுத்தத் தெரிந்தவேறு சில கூட்டத்தாரும் சென்று, முன்பு சிதறலாகக்குடியிருந்தவரொடு கூடிக்கொண்டனர். அவர்களும்ஆசியாவினின்று சென்றவர் களாகவும், தங்கட்குமுந்தினவரின் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும்பெரும்பாலும் இருந்திருக்கலாம்."(பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (1970), 10. ப. 790). "மெசொப்பத்தாமியாவிலும்எகிப்துவிலும் நாகரிக மாந்தனாற் செய்யப்பட்டதிருந்திய கலைகளும் தொழில்களும், ஐரோப்பாவில்முதற்கண் கிரேத்தாத் தீவின் மினோவராலும் (Minoans)கிரேக்க நாட்டு மைசீனியராலும் (Mycenaeans)உறைக்காலத்தில் தழுவப்பட்டுவளர்க்கப்பட்டன." (பிரித்தானியக்கலைக்களஞ்சியம் (1970) 10, ப. 789).
|