பக்கம் எண் :

தமிழர் வரலாறு-23

கிரேக்கரின் நகர நாட்டுக்காலத்தில் (கி.மு.458-404) அரசியல் மதியியல்(அகக்கரணவியல்) குமுகாயவியல் புத்தெழுச்சி யுண்டாயிற்று. கிரேக்க நாகரிகம், கி.மு. 8ஆம்நூற்றாண்டிலிருந்து நண்ணிலக் கடற்கரை ஐரோப்பியநாடுகட்கும் கருங்கடற்கரை நாடுகட்குங்கொண்டுசெல்லப்பட்டது. கிரேக்கராலும்மக்கதோனியராலும் (Macedonians)கி.மு.4ஆம் நூற்றாண்டில் ஒரு பேரரசுஏற்படுத்தப்பட்டது. மக்கதோனிய அரசனானமாஅலெகசாந்தர் (Alexander the Great-கி.மு 356-323), சிந்துவெளிவரை அப் பேரரசைவிரிவுபடுத்தினான். கி.மு.5ஆம் நூற்றாண்டில்உரோமப் பேரரசு கிரேக்கப் பேரரசை வீழ்த்தியது.உரோமப் பேரரசின் தலைநகர், கி.மு.330-ல், உரோமநகரத்தினின்று (பின்னர்க்கான்சுத்தாந்தினோபில் எனப் பெயர்பெற்ற)பிசந்தியத்திற்கு (Byzantium)மாற்றப்பட்டபோது, பிசந்தியப் (Byzantine)பேரரசு தொடங்கிக் கி.பி. 1453 வரை நீடித்தது.பிசந்தியத்திலும் அதையடுத்த சுற்றுப்புறத்திலும்கிரேக்கரே யிருந்தனர். கிரேக்கப் பேரரசில்மட்டுமன்றி, உரோமப் பேரரசிலும் பிசந்தியப்பேரரசிலும் கிரேக்க நாகரிகமே இணைப்புக் கூறாகஇருந்து, இற்றை ஐரோப்பிய நாகரிகத்திற்குஅடிகோலிற்று. ஆயின், அக் கிரேக்கநாகரிகத்திற்கு அடிமணை தமிழ நாகரிகம் என்பதைஉலகம் இன்னும் அறிந்திலது.

மேலையாசியாவினின்று, கிரேக்கநாட்டிற்கு மக்கள் குடியேறு முன்பே, கொளுவுநிலைமொழிகளைப் பேசிக்கொண்டிருந்த துரேனியஇனத்தார் வட ஐரோப்பாவிற் குடியேறிவிட்டனர்.

துருக்கியர் (Turks),காசக்கர் (Cossacks)முதலிய வகுப்பார் சேர்ந்த தார்த்தாரிய (Tartarian)இனத்தாரும் இரசியாவிற் குடியேறி யிருந்தனர்.அதனாலேயே, "Scratch a Russian and you find aTartar" என்னும் ஆங்கிலப் பழமொழியெழுந்தது.

துரேனியர்க்கும்தார்த்தாரியர்க்கும் பின் மேலையாரியரின்முன்னோரான வடதிரவிடர் வடமேலை ஐரோப்பாவிற்குடியேறி னர். அங்கு அவர் மொழி தியூத்தானிய (Teutonic)ஆரியமாகத் திரிந்தது. அது பின்னர்த் தெற்கில்இலத்தீன முறையிலும் அதன்பின் கிரேக்க முறையிலும்மாறிற்று. அதற்கடுத்த திரிபே கீழையாரியமூலமாகும். அதுவும் பின்னர் இந்தியம் ஈரானியம்என்னும் இருகிளையாகப் பிரிந்தது.

தியூத்தானியம் (செருமானியம்)

தியூத்தானியக்கிளை(1) மேலைச்செருமானியம், (2) வடசெரு மானியம், (3) கீழைச்செருமானியம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.பழைய ஆங்கிலம், பழைய பிரிசியம் (Frisian),பழைய சாகசனியம், பழைய உயர்செருமானியம் என்பனமேலைச்