பக்கம் எண் :

22தமிழர் வரலாறு-2

தொகுத்த சிறுதொகுப்பு சிற்றகத்தியம் என்றும் பின்னர்த்தொகுத்த பெருந்தொகுப்பு பேரகத்தியம் என்றும்பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. பிற்காலத்தில்அவையும் இறந்தொழிந்தன.

சிவபெருமான் திருமணத்திற்கு வந்தபதினெண் கணத்தாரையும் தாங்காது பனிமலையமிழ்ந்ததனால், ஞாலத்தின் வடதிசை தாழ்ந்துதென்றிசை யுயர, தேவர் வேண்டுகோட்கிணங்கிஅகத்தியர் தெற்கில் வந்து பொதிய மலைமேல்நின்றபின், இரு திசையும் சமநிலைப் பட்டன என்னுங்கதை, ஒரு காலத்திற் பனிமலை கடலடியிருந்ததையும்,தெற்கிற் பனிமலைபோல் உயர்ந்திருந்த குமரிமலைமுழுகினதையுமே குறிக்கும்.

இனி, அணிவகையிற் பொருள் கொள்ளின்,இலக்கியத் துறை யிலும் பொருளியல் குமுகாயவியல்அரசியல் முதலிய வாழ்க்கைத் துறைகளிலும்,வடக்கில் தாழ்ந்திருந்த ஆரியம், அகத்தியர்தெற்கே வந்தபின் உயர்ந்த தென்றும், தெற்கில்அவற்றில் உயர்ந்திருந்த தமிழம் தாழ்ந்ததென்றும் கொள்ளலாம். இவ்வகை யிலேயே,

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்"

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச்சிறப்புப் பாயிரம் பொருள் படுவதாகும்.

அகத்தியரை யடுத்தே நாரதரும் தென்னாடுவந்து, இசைத்தமிழ் கற்றுப் பஞ்சபாரதீயம் என்னும்இசைத்தமிழ் நூலை இயற்றி யிருத்தல் வேண்டும்.

"இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரைபெருங்குருகும், பிறவும், தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமுதலா உள்ள தொன்னூல்களும் இறந்தன. நாடகத்தமிழ்நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ளதொன்னூல்களும் இறந்தன" என்று 14ஆம்நூற்றாண்டினரான அடியார்க்குநல்லார் தம்சிலப்பதிகார உரைப் பாயிரத்துள்வரைந்திருத்தல் காண்க.

"நாரதன் வீணை நயந்தெரி பாடலும்
.....................................................
மங்கல மிழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவளென" 

(சிலப்.6:18-23)

என்பதனாலும், நாரதனின் தமிழகத்தொடர்பும் இசைப் புலமையும் அறிப்படும். வீணைஎன்பது தமிழர் நரப்புக்கருவி. நரம்பு விண்ணெனஇசைப்பது வீணை. நோயினால் நரம்பு வலிக்கும்போது,நரம்பு விண்விண் எனத் தெறிக்கின்றது என்று கூறும்வழக்கை நோக்குக.