பக்கம் எண் :

தமிழர் வரலாறு-223

விண் - வீண் - வீணை = . வீணா.மூங்கிலைக் குறிக்கும் வேணு என்னும்வடசொல்லினின்று, வீணை அல்லது வீணா என்னும்சொல்லைத் திரிப்பது பொருந்தாது.வேதக்காலத்தில் ஆரியருக்கு நரப்புக்கருவியுமில்லை; இசைப்புலமையு மில்லை. ஒரு நரம்பில்ஒரே யிசை(சுரம்) இசைப்பது யாழ் என்றும், ஒருநரம்பில் மெலிவு சமன் வலிவு என்னும்முந்நிலைகளுள் ஒன்றும் பலவும் இசைப்பது வீணைஎன்றும் வேறுபாடறிக. செங்கோட்டியாழும்சகோடயாழும் வீணை வகைகளே. இவற்றுள் முன்னதுமெட்டுள்ளது; பின்னது கோட்டியம் (கோட்டுவாத்தியம்) போல் மெட்டில்லது.

"நாடகத்தமிழ் நூலாகிய பரதம்"என்று அடியார்க்குநல்லார் குறித்திருப்பதால்,தமிழ்ப் பரதநூலே வடமொழி நடநூலாகிய பரதசாத்திரத்திற்கு முதனூலென அறிக. முதனூலின்பெயரையே வழிநூற்கும் இடுவது ஓர் ஆரிய வலக்காரம்.முதனூலை அழித்து விட்டு வழிநூலை முதனூலென்பது அவர்வழக்கம். ஆதிவாயிலார் வெண்பாவில் இயற்றியபரதசேனாபதியம் என்னும் நாடகத் தமிழ்நூல்இறந்துவிட்டது. இன்று வழங்கும் பரதசேனாபதியம்வேறு.

இராமாயணம் என்பது, கதையைநோக்கினும், பாவியத்தை (காவியத்தை)நோக்கினும், பாரதம்போல் அத்துணை வரலாற்றுமுறைப்பட்டதும் தெளிவும் திட்டமுமானசெய்திகளைக் கொண்டதும் அன்று.

வடநாட்டில் நாற்பதுவகை இராமாயணக்கதைகள் வழங்கு கின்றன வென்றும், அவற்றுள்ஒன்றில் இராமன் தன் தங்கையான சீதையைமணந்தான் என்றும், இன்னொன்றில் இராமன் இராவணனின் மனைவியான சீதையைக் கவர்ந்துகொண்டான்என்றும் இருப்பதாகச் சொல்கின்றனர்.

இராமன் கோதாவரிக்குத் தெற்கில்வரவில்லையென்றும், சீதையைக் கவர்ந்த அரக்கன்வாழ்ந்த இலங்கை கோதாவரி யாற்றிடைத் திட்டேயென்றும், தமிழ்நாட்டிலும் இலங்கைத் தீவிலும்நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும்செய்திகளெல்லாம் பிற்காலத்துக் கட்டுக்கதையென்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர்.

இதற்கு ஏதுக்களாவன:

1. 

இராமன் தன் மனைவியுடனும் தம்பியுடனும், கோதாவரிக் கரையிலுள்ளதும் ஐந்து ஆலமரங்கள் சேர்ந்திருந்ததுமான பஞ்சவடியில் தங்கினமை.

2. 

இராவணன் சீதையைப் பஞ்சவடியிற் கவர்ந்தமை.