3. | இலங்கை என்னும் சொற்கு ஆற்றிடைக்குறை என்னும் பொருளுண்மையும், கோதாவரி நடுவில் ஓர் ஆற்றிடைக்குறை யுண்மையும். |
4. | கி.மு. 3ஆம் நூற்றாட்டை மோரியர்க்குமுன், வடநாட்டார் ஒருவரும் தமிழகத்தின்மேற் படையெடுக்காமை. |
5. | இராமன் படையைக் குரக்குப்படை யென்றதும், குரங்குகட்கு உயர்திணைத் தன்மை கூறியதும், அனுமான் என்னும் குரங்கைப் பன்மொழிப் புலவனென்றும் தொண்ணிலக்கணப் (நவ வியாகரண) பண்டிதனென்றும் பாராட்டியதும். |
6. | சீதையைத் தேடுமாறு இராமன் குரங்குகளை விடுத்தபோது, கோதாவரிக்கு வடக்கிலுள்ள விந்தமலை, நருமதையாறு, ஏமகூடம், தண்டக அடவி, முண்டத்துறைச் சோலை, பாண்டு மலை ஆகிய இடங்களைப் பார்க்கச் சொன்னதுடன், கோதாவரியும் அடையுங்கள் என்றமை. |
7. | எருமையூர்க்கு (மைசூர்க்கு) வடக்கிலுள்ள கிட்கிந்தை மலை, அன்று சேரநாட்டைச் சேர்ந்து மாவலி (மகாபலி) வேந்தன் ஆட்சிக்குட் பட்டிருந்தமை. |
8. . | இராமவிலக்குமணர் வெள்ளக்கணக்கான குரக்குப் படை யுடன் சோழநாடு வழியாகப் பாண்டிநாடு வந்து, கடலுக் கணைகட்டி இலங்கை புகுந்து, இராவணனொடு பதினெண் மாதம் பொருது வென்று அரக்கர் குலத்தை வேரறுத்தனர் என்னும் செய்தி, சோழனுக்கும் பாண்டியனுக்கும் தெரியாது போனமை |
9. | இராமன் விந்தமலைக்குத் தெற்கில், முனிவர் என்னும் ஆரியப் பூசாரிகளும் அரக்கரும் சடாயு என்னும் கழுகும் குரங்குகளும் தவிர, தமிழரையும் வேறு மக்களையுங் காணாமை. |
10. | பீடுமன், இராமன் காலத்தவனான பரசுராமனிடம் விற்கலை பயின்றவ னாயினும், இராமனையோ இராமாயணத்தையோ அறியாதிருந்தமை. |
11. | இராமாயணக் கதை இடத்திற் கிடமும், இராமாயணப் பாவி யம் ஆசிரியர்க் காசிரியரும், சிறிதும் பெரிதும் வேறுபட்டி ருத்தல். |
12. | இராமாயணப் பாவியம், மேன்மேலும் உயர்வுநவிற்சியும் இடைச்செருகலும் பிற்சேர்க்கையும் கதை மாற்றமும் கொண்டு வந்துள்ளமை. |