பக்கம் எண் :

தமிழர் வரலாறு-225

13.  இராமாயணப் பனுவல் முதன்முதல் வான்மீகியாரால் சிற்றளவாகப் பாடப்பட்டிருக்கலாம். பாரதக் காலத்திற்குப் பின் பதின்தோற்றரவு (தசாவதாரம்) வகுக்கப்பட்டபோது, இது விரிவடையத் தொடங்கி யிருக்கலாம்.
 

"பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
வையமுந் தவமுந் தூக்கின் தவத்துக்
கையவி யனைத்தும் ஆற்றா தாகலின்
கைவிட் டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே" 

(புறம்.358)

என்னும் புறப்பாட்டு வான்மீகியார்என்னும் புலவரொருவர் பாடியதாக வுள்ளது. இது அரசுநிலையாமையையும் தவத்தின் மேன்மையையும் அழகாகஎடுத்துக் கூறுவது. ஆசிரியர் பெயரையும் பாட்டின்பொருளையும் நோக்குமிடத்து, இவர் இராமாயணவான்மீகியார்தாமோ, அன்றி அவர் வழியினரோஎன்னும் எண்ணம் மின்போல் தோன்றி மறைகின்றது.

அகத்தியர் வழிகாட்டியபின் தமிழகம்வந்த பிராமணர், தென்னாட்டாரும் வடநாட்டார்போன்றே மதப்பித்தரா யிருந்தது கண்டு, தாம்நிலத்தேவரென்றும் தம் மொழி தேவமொழி யென்றும்ஏமாற்றி, குமரிமுதல் பனிமலைவரை இந்தியப்பழங்குடி மக்கள் அனைவரையும், உலகில் மக்களுள்ளகாலமெல்லாம் தமக்கும் தம் வழியினர்க்கும்அடிமைப்படுத்துதற் பொருட்டு, குமுகாயத் துறையில்ஒன்றும் சமயத்துறையில் ஒன்றுமாகஈரனைத்திந்தியத் திட்டங்களை வகுத்துவிட்டனர்.


நால்வரணப் பகுப்பு

தமிழ்ப் பொருளிலக்கணத்தில்அகப்பொருட்குச் சிறப்பாக வுரியவராகத்தலைமக்களே கொள்ளப்பட்டதனால், கல்வி காவல்வணிகம் உழவு கைத்தொழில் என்னும் மருதநிலத்தொழில்கள் ஐந்தனுள், கைத்தொழில் உழவிற்குப்பக்கத் துணையான தென்று நீக்கி, ஏனை நான்கிற்கும்உரிய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும்நால்வகுப்பாரையே காதலன் காதலி யென்னும்கிளவித் தலைவராகக் குறித்தனர்.

அந்தணர் என்பது துறவியரான ஐயரையேசிறப்பாகக் குறிக்கு மேனும், அகப்பொருட்டுறைக்குஅவர் ஏற்காமையின் இல்லறத் தாரான பார்ப்பாரேஅந்தணர் என்னும் பெயராற் கொள்ளப் பெறுவர்.அந்தணர் முதலிய நால்வகுப்பார் பெயரும் அவ்வவ்