பக்கம் எண் :

26தமிழர் வரலாறு-2

வகுப்பார் அனைவரையுங் குறிக்குமேனும், அவருள்தலைமை யானவரே, கிளவித்தலைவராகக் குறிக்கப்பெறுவர் என்பதை அறிதல் வேண்டும். ஆகவே, வேளாளர்என்பவர் அவ் வகுப்பாரின் (உழுவித் துண்ணும்)தலைவரான வேளிர் என்னும் குறுநில மன்னரே யென்றும்,வணிகர் என்பவர் மாசாத்துவன் போலும்நிலவணிகரும் மாநாய்கன்போலும் நீர்வணிகருமேயென்றும், அரசன் என்பவர் கோக்களும் வேந்தருமேயென்றும், அந்தண ரென்பார் தலைமைப் புலவரும்குருக்களும் அமைச்சருமே யென்றும், இது புலனெறிவழக்கமென்னும் இலக்கிய (செய்யுள்) வழக்கே யென்றும்அறிந்துகொள்க. துறவியர் அகப்பொருட் டலைவரல்லரேனும், தூது செல்லல் சந்து செய்தல் முதலியபுறப்பொருட்குத் தலைவராவர்.

உலக வழக்கில் கல்வி, காவல் (ஆட்சி),வணிகம், உழவு, கைத்தொழில் என்னும் ஐவகைத்தொழில் செய்வோரும், முறையே, பார்ப்பார் அரசர்வணிகர் உழவர்(வேளாளர்) தொழிலாளர் எனப்படுவர்.பிராமணர் இப் பாகுபாட்டைப் பயன்படுத்தி,பார்ப் பாரையும் அந்தணரையும் ஒருங்கே பிராமணர்என்றும், அரசரைச் சத்திரியர் என்றும், உழவர்சிறார் சிலர் மாடு மேய்ப்பதாலும்,உழுவித்துண்ணும் வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்(வெள்ளாளர்) பலர் கடைகாரரும் வணிகருமாயிருப்பதாலும், உழவும் வணிகமும் மாடுமேய்ப்பும்ஒருங்கே செய்பவரை வைசியர் என்றும், உழவுங்கைத்தொழிலுங் கூலிவேலையுஞ் செய்யும்மூவகுப்பாரைச் சூத்திர ரென்றும் மக்களைநால்வகுப்பாக வகுத்து, பிராமணனுக்கு வெண்ணிறமும்சத்திரியனுக்குச் செந்நிறமும் வைசியனுக்குப்பொன்னிறமும் சூத்திரனுக்குக் கருநிறமும்சார்த்திக் கூறி, நால்வரணப் பாகுபாட்டைஏற்படுத்தி, பிராமணர் கல்வித்தொழிலை யும் பிறவகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்டதொழில்களையும் வழிவழி செய்து வரவேண்டுமென்றும், சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்குஇறங்கு வரிசையில் தாழ்ந்தவ ரென்றும், சூத்திரன்மேன் மூவர்க்கும் வைசியன் மேலிருவர்க்கும்சத்திரியன் பிராமணர்க்கும் தொண்டுசெய்யவேண்டு மென்றும், இது இறைவன் ஏற்பாடென்றும்,மேல்வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இருபிறப்பாளரென்றும், வேதத்தைச் சூத்திரன் காதாலுங்கேட்கக் கூடாதென்றும், பிராமணனைக் காணின் மற்றமூவரும் தத்தம் தாழ்வுநிலைக்குத் தக்கவாறு ஒதுங்கிநிற்கவேண்டு மென்றும் இறைவன் கட்டளையிட்டதுபோற் கற்பித்துவிட்டனர்.

இச் சட்டதிட்டம் வடநாட்டில்விரைந்து முழுவதும், தென் னாட்டிற் படிப்படியாகப்பேரளவும், ஆட்சிக்குக் கொண்டுவரப் பட்டது.