பக்கம் எண் :

36தமிழர் வரலாறு-2

பாரதப்போர் முடிந்தபின், வியாசர்மகாபாரதம் என்னும் வடமொழிப் பாவியத்தைஇயற்றினார். அது பின்னர் மேன்மேலும்விரிவாக்கப்பட்டது. வியாசர் பதினெண்புராணங்களையும் இயற்றியதாகச்சொல்லப்படுகின்றது.

பாரதப் போருக்குப் பின்னரே அதர்வ(அதர்வண) வேதம் தோன்றி, வேதம் நான்கெனவியாசரால் வகுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.அதனாலேயே அவர் வேதவியாசர் என்று பெயர்பெற்றதாகத் தெரிகின்றது. முந்தின வேதங்களிற்சொல்லப்படாத பல்வேறு உலக வாழ்க்கைச்செய்திகளும், ஆரிய ஒழுக்க முறைகளும், ஆக்க வழிப்புமந்திரங்களும், சாவேள்வியும், சில இருக்கு வேதமந்திரங்களுடன் சேர்த்து அதர்வ வேதத்திற்கூறப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. பேய்மந்திரங்களிலும் செய்வினையிலும் பற்றும்நம்பிக்கையுங் கொண்ட கல்லா மாந்தரைக்கவர்தற்கு, அதர்வ வேதம் தொகுக்கப்பட்டதுபோலும்!

பகவற்கீதை கண்ணபிரானாற்சொல்லப்பட்டதன்று; பத்துத் தோற்றரவு வகுப்பும்அத்துவைதம் என்னும் இரண்டன்மைக் கொள்கையும்தோன்றிய பின்னரே, ஒருவரால் இயற்றப்பட்டு மேன்மேலும் விரிவாக்கப்பட்டு வந்திருத்தல் வேண்டும்.

சாலோமோன் (கி.மு. 1034-980) என்னும்யூதவரசன், பாரதக் காலத்தில் தென்னாட்டினின்றுமயில் குரங்கு தங்கம் முதலிய பொருள்களைக்கலங்களில் தருவித்தான்.

மயில் தமிழகக் குறிஞ்சிநிலப் பறவை.தோகை என்பது அதன் சினையாகுபெயர். அதற்குஅழகுதருவது அதன் தோகையே. தோகை-Arab.தாவூஸ், தவஸ், G.K.தவோஸ், L. பவோ, E.பீ(pea), peacock(மயிற்சேவல்).

கப்பு = மரக்கிளை. குரங்குமரக்கிளையில் வாழ்வது.

"கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப." 

(தொல்1512)

கப்பு - கப்பி (குரங்கு) - Skt.கபி, Gk. கேப்போஸ், Heb.கோப் (kof), E.(ape).

பொன் கொங்குநாட்டில் மிகுதியாகவிளைந்தது முன்னர்க் கூறப்பட்டது.

"பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்
டேழிற் குன்றம் பெறினும்" 

(நற்.391)

"உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த