வேளிருள் வேளே விறற்போ ரண்ணல் ............................................................................... இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற் பொன்படு மால்வரைக் கிழவக | (புறம்.201) |
என்பன, சாலோமோன் கப்பல்கள்பொன் ஏற்றிச் சென்ற உப்பரா (Ophir)என்னும் மேல்கரைத் துறைமுகத்திற்கு அடுத்துள்ளகொண் கானத்திலும் கொங்கிலும் பொன்விளைந்தமை கூறுதல் காண்க. பாரதக் காலத்தில் ஆரியப் பூசாரிகள்வடஇந்தியா முழுதும் பரவியிருத்தல் வேண்டும்.அதன்பின் அந் நிலப்பகுதிக்கு ஆரியா வர்த்தம்என்னும் பெயருண்டாயிற்று. வங்கநாட்டை யடைந்துகாளிக் கோட்டத்தைக் கண்டபின்,காளிவணக்கத்தை மேற்கொண்டு, காளி கோயிற்பூசாரியரு மாயினர். ஆரியன் என்னும் சொல் ஐரோப்பிய மொழிகளும், பாரசீகமொழியும், வேத மொழியும் சமற்கிருதமும்,வடஇந்திய மொழிகள் மட்டுமன்றி நடுவிந்தியமொழிகளும், இன்று ஆரியம் என்று சொல்லப்படினும்,முதன்முதல் அப் பெயர் ஏற்பட்டது வேதமொழியும்சமற்கிருதமும் ஆகிய வடமொழிக்கே. சென்றநூற்றாண்டில் மாகசுமுல்லரே வேத மொழிக்கு அல்லதுசமற்கிருதத்திற்கு இனமான மொழிகட் கெல் லாம்ஆரியம் என்னுஞ் சொல்லைப் பொதுப்பெயராகவழங்கினார். ஐரோப்பிய மொழிகட்கும்பாரசீகத்திற்கும் ஆரியம் என்னும் பெயர்பொருந்தினும் வடஇந்திய மொழிகட்கு, சிறப்பாகநடுவிந்திய மொழிகட்கு, அப் பெயர் பொருந்தாது.வடமொழியாளரே வேதக்காலத்தின்பின்,தென்னிந்திய மொழிகளை யெல்லாந் திரவிடமொழிகள் என்று கொண்டு, தமிழ், தெலுங்கு,கன்னடம், மராத்தி, குசராத்தி ஆகிய ஐந்தையும்ஐந்திரவிடம் (பஞ்ச திராவிட) எனக் குறித்தனர்.வடஇந்திய மொழிகளை 'முன்வடமொழி' (பிராகிருதம்)எனக் குறிப்பதே பொருத்தமாம். வடஇந்தியமொழிகளையும் நடுவிந்திய மொழிகளையும் ஆரியமொழிகள் எனக் கொள்வது மட்டுமன்றி, அவற்றைச்சமற்கிருதக் கிளைகளாகவுங் கொள்வது, இருமடிமொழியியல் வழுவாம். இது, தமிழ் குமரிநாட்டுமொழி யென்னும் உண்மையையும் அதன் வடதிசைத்திரிபையும் அறி யாததனால் விளைந்த கேடாகும். ஆரியன் மொழி ஆரியம். ஆரியன் (ஆர்ய) என்னுஞ் சொல்லை 'அர்ச்' என்னும் மூலத்தினின்று திரிந்ததாகக் கொண்டு, வணங்கப் படத்தக்கவன் என்று அதற்குப் பொருள் கூறுவர் செருக்கிற் சிறந்த பிராமணர், ஏரைக் குறிக்கும் 'அர்' என்னும் இலத்தீனச் சொல்லி னின்று ஆரியன் என்னும் சொல்லைத் திரித்து, அதற்கு ஏர்த்தொழில்
|