பக்கம் எண் :

38தமிழர் வரலாறு-2

செய்வோர் என்று பொருள் கூறுவர் மாகசுமுல்லர். சமற்கிருதத்தில் இல்லாத மேலையாரியச் சொற்களுள் 'அர்' (ஏர்) என்பது ஒன்றென்று அவரே கூறியிருப்பதாலும், வேத ஆரியர் மாடு மேய்த்தவரேயன்றிப் பயிர்த்தொழில் செய்யாதவராதலாலும், அதுவும் பொருந்தாது.

ஆரியம் தமிழின் இருமடித் திரிபாதலாலும், சமற்கிருதச் சொற்களின் ஐந்தி லிருபகுதி தமிழாதலாலும், வடமொழியாளர்க்கு ஆரியர் என்னும் பெயர் இந்தியாவிலேயே, அதுவும் அவர் தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே ஏற்பட்டதனாலும், ஆரியன் என்னும் சொற்கு மூலம் தமிழிலேயே ஆய்ந்து காணல் வேண்டும். "மிலேச்சர் ஆரியர்" என்னும் பிங்கல நூற்பா(5:72), ஆரியரின் முற்கால நிலைக்கு ஏற்பினும் பிற்கால நிலைக்கு ஏற்காது.

அருமை = பெறற்கரிய அல்லது காண்டற்கரிய பெருஞ் சிறப்பு, மேன்மை. அரு - அரி - ஆரி = மேன்மை. ஆரி - ஆரியம் = மேன்மை.

"ஆரி யந்தனி யைங்கரக் களிறு" 

(கம்பரா. ஊர்தேடு.11)

ஆரியம் - ஆரியன் = மேலோன், பெரியோன்.

"அஞ்சிலே யொன்றா றாக வாரியற் காக வேகி"             (கம்பரா. பாயிரம். அனுமன்)

"ஐயுற லுளதடை யாளம் ஆரியன்
மெய்யுற வுணர்த்திய வுரையும் வேறு" 

(கம்பரா. உருக்.25)

"ஆரிய னுரைப்ப தானா னனைவரு மதனைக் கேட்டார்"       (கம்பரா. விபீடண.106)

கம்பர் இராமனை ஆரியன் என்றது, பண்பும் பதவியும் பற்றியுமே யன்றி இனம்பற்றி யன்று. இராமன் சோழர்குடியைச் சேர்ந்தவ னென்றும் வடநாட்டுத் திரவிடனென்றும், ஆரிய இனத்தானல்ல னென்றும் அறிதல் வேண்டும்.

பார்ப்பான், அந்தணன், ஐயன் என்னும் தூய தமிழ்ப் பெயர் களை ஆரியர் எங்ஙனம் மேற்கொண்டனரோ, அங்ஙனமே ஆரியன் என்னும் பெயரையும் தென்சொல் என்று தெரிந்தோ தெரியாமலோ மேற்கொண்டிருத்தல் வேண்டும். இது, துரை என்னும் தென்சொல் வெள்ளையருக்கே பிற்காலத்தில் வரையறுக்கப்பட்டது போலாம்.

இராமாயணக் கதையிலும் பாவியத்திலும் பல செய்திகள் பிராமணராற் கட்டிச் சொல்லப்பட்டிருப்பதுபற்றி, இராமனை ஓர் ஆரிய அடிமைய னென்று இகழ்ந்துவிடல் கூடாது. மேலும்,