பக்கம் எண் :

தமிழர் வரலாறு-239

இக்காலத்திலும் நம்மிடையே ஆரிய அடிமையரான அமைச்சரும் கட்சித்தலைவரும் இருக்கும்போது, நாம் ஏன், வரலாற்றுச் சான்றில்லாததும் மெய்யான தென்று திட்டமாகத் தெரியாததுமான ஒரு பழங்கதையிற் சொல்லப் பட்டிருப்பவனைப்பற்றிக் கருதி வீணாக நோகவேண்டும்?

சம்புகன் என்னும் சூத்திரன் தவஞ்செய்ததால் ஒரு பிராமணப் பிள்ளை இறக்க, அது அகாலச் சாவென்று கருதித் தந்தை துயருற்றதை, நாரதரால் அறிந்த இராமன் சூத்திரனைக் கொன்ற வுடன், பிராமணப் பிள்ளை உயிர்பெற் றெழுந்தது என்னுங் கதை, பழங்குடி மக்களை அச்சுறுத்தப் பிராமணர் கட்டிய கட்டுச் செய்தியாகவு மிருக்கலாம்.

துரோணாச்சாரியன் ஏகலைவனுக்கு விற்கலை பயிற்ற இசையாமையும், அவன் தானாகப் பயின்றபின் அவனது இடக்கைப் பெருவிரலைத் துண்டிக்கச் செய்ததும், பாரதக் காலத்தில் உண்மையாக நடந்ததென்று கருத இடமுண்டு.

ஆரியன் என்ற சொல்லொடு,aristo(best) என்னும் கிரேக்கச்சொல் தொடர்புடையதா யிருக்கலாம்.

வல் - வள் - வட்டு (வள்+து) - வட்டம் - பிரா. வட்ட - வ. வ்ருத்த - வர்த்த. வர்த்த என்னுஞ்சொல் 'ஆ' என்னும் முன்னொட்டுப் பெற்று ஆவர்த்த என்றாகும். ஆரிய + ஆவர்த்த = ஆரியா வர்த்த. பிரம வர்த்த என்பதில் முன்னொட்டில்லை. வட்டம், வட்டகை, வட்டாரம் என்னுஞ் சொற்கள் தமிழகத்திலும் நாட்டுப் பகுதிகளைக் குறித்தல் காண்க.

பாபிலோனுக்கு முதன்முதல் மயில் கொண்டுசென்றவர் தென்னாட்டு வணிகரே.


தொல்காப்பியம்
(கி.மு.7ஆம் நூற்றாண்டு)

தொல்காப்பியம் இன்றுள்ள முதல் தொன்னூல் மட்டுமன்றி, பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிநிற்கும் ஒரு பெருந் தூணாகும். அஃதின்றேல், கடைக்கழகத்திற்கு முந்திய தமிழும் தமிழ் வரலாறும் அதனால் தமிழர் வரலாறும் அறவே இல்லாமற் போம்; தமிழன் உலகுள்ள வளவும் ஆரியனுக் கடிமையாகவே இருந்துழல்வான். குமரிநாட்டுத் தமிழன் தன் நுண்மாண் நுழைபுலத்தால் வகுத்த பொருளிலக்கணம், அதற்கு அச்சிறப்பைத் தந்துள்ளது.

அத்தகைய சிறப்பு வாய்ந்ததேனும், முகமண்டபமும் கூட