பக்கம் எண் :

தமிழர் வரலாறு-243

சகரமுதற் சொற்கள்

சக்கட்டி, சக்கல், சக்கு, சக்கை,சகடம் (சகடை), சகண்டை, சகதி, சகோடம்,

சங்கங்குப்பி, சங்கு (சங்கம்),

சச்சரவு, சச்சு,

சட்டம் (சட்டகம்), சட்டன்(சட்டநம்பி, சட்டநம்பிப் பிள்ளை-சட்டாம்பிள்ளை), சட்டி, சட்டு, சட்டுவம்(சட்டுகம்), சட்டை, சடக்கன், சடக்கு, சடங்கம்,சடங்கு, சடசட (சடபுட), சடார், சடுகுடு, சடை, சடைவு,

சண்டி, சண்டு, சண்டை, சண்ணம், சண்ணி,சண்ணு, சண்பு (சம்பு), சணம் (சணல்), சணாய், சணாவு,சணை,

சத்தவி, சத்தான் (செத்தான்), சதக்கு,சதுப்பு, சதை,

சந்தனம், சந்தி, சந்து, சந்தை,

சப்பட்டை, சப்பளி(சப்பளம்-சப்பணம்-சம்மணம்), சப்பரம், சப்பன்,சப்பாணி, சப்பு (சவறு), சப்பு (சப்பிடு-சாப்பிடு),சப்பை,

சம், சம்பளம், சம்பா, சமட்டு(சமட்டி-சம்மட்டி, சவட்டு-சவட்டி - சாட்டி,சவட்டை-சாட்டை), சமம் (சமன்), சமர் (சமர்த்து),சமை (சமையல், சமைதல், சமையம், சமயம்),

சர், சர (சரசர), சரக்கு,சரக்குப்புரக்கு, சரட்டு, சரடு, சரப்பளி (சரப்பணி),சரவடி, சரவை, சரி, சருக்கரை (சக்கரை), சருக்காரம்(சக்காரம்-சக்கரம்,செக்கு), சருக்குக் கட்டை,சருகம், சருகு, சருச்சரை, சருவு (சருவம்), சரேல்,

சல் (செல்), சல்லரி, சல்லி, சல்லிகை,சலக்கு, சலங்கு, சலங்கை (சதங்கை), சல (சலசல), சலகு(சலகன்-சலவன்), சலகை, சலம்,சலம்பு, சலவை, சலாகை,சலாங்கு, சலி (சலியடை-சல்லடை), சலுக்குமொலுக்கு,சலுகை,

சவ்வு, சவ (சவு), சவக்கு, சவடி, சவடு, சவம்,சவர், சவர்க்களி, சவலை, சவள், சவளம், சவளி,சவளை, சவறு, சவை,

சழக்கு, சழங்கு, சழி,

சள், சள்ளு, சள்ளை, சள (சளசள), சளப்பு,சளம்பம், சளார், சளி,

சற்று, சறாம்பு, சறுக்கு, சறை, சறைமணி,சன்னம்.

இச் சொற்களெல்லாம் தொல்காப்பியர் காலத்திற்குப் பின் றோன்றியவை என்பர் சிலர். அவர் தமிழியல்பையும் தமிழ்