பக்கம் எண் :

தமிழர் வரலாறு-253

மேல்கடற்கரையிலுள்ளகொடுங்கோளூர்க்கு மாற்றிக்கொண்டான். அதுபின்னர்க் கருவூர், வஞ்சி என்னும் பெயர்களும்பெற்றது. பழைய கருவூர் சோழர் வயப்பட்டது.

சேரநாட்டு மக்கள் குடமலைக்குக்கிழக்கிலுள்ள கொங்கு நாட்டினின்று சென்றுகுடியேறியதனாலேயே, அவர் வழியினர் மொழியிலும்,கதிரவன் எழுந்திசை கிழக்கு என்றும் விழுந்திசைமேற்கு என்றும், சோழ பாண்டி நாடுகளிற் போன்றேசொல்லப் படுகின்றன. குடமலைக்குக் கிழக்கிலுள்ளநிலப்பகுதியில், கடலடுத்த கீழ்ப்பாகம்தாழ்ந்தும் மலையடுத்த மேற்பாகம் உயர்ந்தும்இருப்பதால், கதிரவன் எழுந்திசையும்விழுந்திசையும் கிழக்கு மேற்கு எனப்பட்டன.கீழ்-கீழ்க்கு-கிழக்கு. மேல்-மேற்கு. குடமலைக்குமேற்கிலுள்ள நிலப்பகுதி கிழக்கில் உயர்ந்தும்மேற்கில் தாழ்ந்தும் இருப்பதால், கிழக்கைமேற்கென்றும் மேற்கைக் கிழக்கென்றும் சொல்லவேண்டும். அவ் வழக்கின்மையால், சேரநாட்டாரின்முன்னோர் தமிழகத்தின் கீழைப் பகுதியினின்றேமேலைப்பகுதிக்குச் சென்றனர் என்பது தெளிவாம்.

மேற்றிசையைக் குறிக்கப் 'படுஞாயிறு'(படுஞாயிற்றுத் திசை) என்னும் சொல்வழக்கும்சேரநாட்டில் அல்லது மலையாள நாட்டில் உண்டேனும்,அதுவும் சோழ பாண்டி நாட்டிற் பொழுதடைவைக்குறிக்கும் கீழைத் தமிழ்ச்சொல்லே யென்றும்,மேற்கு என்னும் சொல் அதனால் அங்குத் தன் பொருளைஇழந்துவிடவில்லை யென்றும், கீழ்த்திசையைக்குறிக்கக் கிழக்கு என்பது தவிர வேறொரு சொல்லுமில்லை யென்றும் அறிந்துகொள்க.

கிழக்கிந்தியத் தீவினின்றுகரும்பைக் கொண்டுவந்து பயிராக்கியமுதுபழங்காலச் சேரனை, அதிகமானின் முன்னோ னென்றுஒளவையார் கூறியிருப்பதும், சேரநாட்டு மக்களின்முன்னோர் கொங்குநாட்டினின்று சென்றவர் என்பதைவலியுறுத்தல் காண்க.

குமரிமலைத்தொடர் மூழ்கியபின்,நிலமட்டத்தில் வடநாடு உயர்ந்தும் தென்னாடுதாழ்ந்தும் போனதனால், வடதென் திசைகட்குஉத்தரம், தக்கணம் என்னும் பெயர்கள்ஏற்பட்டுள்ளமையையும் நோக்குக.

உ = உயர்வு. தக்கு = தாழ்வு. உத்தரம் - .உத்தர. தக்கணம் - . தக்ஷிண. எழுங்கதிரவனைநோக்கும் போது தென்றிசை வலப்புறத்திலிருப்பதனால், கதிரவ வணக்கங் கொண்ட ஆரியர்தக்ஷிண என்னுஞ் சொல்லிற்கு வலம் (right)என்னும் பொருள் கொண்டனர்.

ப்ரதக்ஷிண = வலமாகச் சுற்றிவருதல்.L.dexter = right.