கும்-கும்பு. கும்புதல் = குவிதல், கூடுதல். கும்பு-கும்பம் = 1.குவியல். 2. குடம். 3. யானை மத்தகம். 4.கும்ப வோரை. 5. கும்ப மாதம் (மாசி). கும்பம்-வகும்ப (kumbha). கும்பு-கும்பளம் = பூசணிக்காய். கும்பு-கூம்பு-கூப்பு. கூப்புதல் =குவித்தல். கும்பு-கும்பிடு. கும்பிடுதல் =கைகுவித்தல். கும்பு-குப்பு-குப்பல்.குப்பு-குப்பி-கொப்பி = கும்மி. குப்பு-குப்பை = குவியல், மேடு, கழிவுப்பொருட் குவியல். கும் - குமி - குமிழ் - குமிழி. குமி - குவி - குவியல், குவியம், குவால், குவை. கும் - குங்கு. குங்குதல் = 1.குவிதல்.2.சுருங்குதல்.3.குன்றுதல். குங்கு - கொங்கு = குவிந்த பொருள் அல்லது இடம். கொங்கு - கொங்கை = 1. குவிந்த முலை. 2.மரத்தின் புடைப்பு (protuberances or knobs of a tree). கொங்கு - கோங்கு = கொங்கைபோற் குவிந்த மொட்டு, அதன் மலர், அது பூக்கும் மரம். "வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப் பேந்திய முற்றா விளமுலை" | (புறம்.336:9-10) |
என்பது, கோங்கமொட்டு கொங்கைபோற்குவிந்ததென்பதைத் தெரிவித்தல் காண்க. கொங்குநாடு பிற்காலத்திற்குடகொங்கு குணகொங்கு என இரண்டாகப் பிரிந்தது.பின்னர்க் குணகொங்கும் வடகொங்கு தென்கொங்குஎன இரண்டாகப் பிரிந்தது. எருமையூர் நாட்டின்மேற்பகுதி குடகொங்கு; "குடகக்கொங்கரும்"(30:159) என்று சிலப்பதிகாரம்கூறுவதால், குடகப் பகுதியே முதற்காலக்குடகொங்காகும். அதன் கீழ்ப்பகுதியும் சேலங் கோவைமாவட்டங்களும் குணகொங்கு, அது இரண்டாகப்பிரிந்தபின், எருமையூர் நாட்டின் கீழ்ப்பகுதிவடகொங்கு; சேலங் கோவை மாவட்டங்கள்தென்கொங்கு. வடகொங்கின் தென்பகுதி கங்கநாடெனமாறிற்று. இன்று கொங்குநா டெனப்படுவது சேலங்கோவை மாவட்ட நிலப்பகுதியே. அதுவே தென்கொங்குவடகொங்கு மேல்கொங்கு (மீகொங்கு) என மூன்றாகப்பிரிந்தும் உள்ளது. கொங்குநாடு தொடர்ந்த போர்நிகழ்ச்சியாற் செங்களமாகி அமைதிகுலைந்ததனால், சேரன் தன் தலைநகரைக்கருவூரினின்று
|