பக்கம் எண் :

தமிழர் வரலாறு-255

"சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென்சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலி லாய்ந்தவொண் டீந்தமிழ்"

என்று மாணிக்கவாசகர்பாடியது இக் கருத்துப்பற்றியே. அகத்திய மும்தொல்காப்பியமும் கடைக்கழக இலக்கணநூல்களாயிருந்தன.

இடைக்கழகத்திற்கும்கடைக்கழகத்திற்கும் ஈராயிரத்தைந்நூறாண்டிற்குமேல் இடையீடுபட்டுவிட்டதனால்,இடைக்கழகத் திறுதிப் பாண்டியனான முடத்திருமாறனேகடைக்கழக முதற் பாண்டியனானான் என்பது பொருந்தாது.இந் நெட்டிடை யீட்டிற்குக் கரணியம் பின்னர்க்கூறப்படும். கழக இருக்கையை இறையனா ரகப்பொருளுரைஉத்தர மதுரை யென்று கூறியது தென்மதுரையொடுஒப்புநோக்கியென் றறிக.

கழகத்திற்குத்தொகை யென்றும், கூடல் என்றும் பெயர்கள்ஏற்பட்டன. அதன்பின், இடவாகு பெயராக மதுரையும்கூடலெனப் பட்டு, மாடச் சிறப்பால் மாடக்கூடல்,நான்மாடக்கூடல் என்னும் வழக்கெழுந்தது. மாடங்கள்முகில்படியுமாறு வானளாவ வுயர்ந் திருந்ததனால்,நான்முகின் மாடக்கூடல் என்று புலவர் புகழ்ந்துபாடினர். அத் தொடரைத் தொல்கதையாளர்பயன்படுத்திக் கொண்டு, மதுரைமேற் கடுமழைபொழிந்த நான்முகில்களை நான்மாடங்கள் கூடித்தடுத்தன வென்று கதை புனைந்துவிட்டனர்.

மதுரைக் கோட்டைவாயில் ஒன்றன் முன், ஒரு மூதால மரம்படர்ந்தோங்கி யிருந்ததனால், அவ்விடம் ஆலவாய்என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம். அப்பெயரையும் பொருள் திரித்து, பாம்பினால் எல்லைகாட்டப்பட்ட விடமென்று கதை கட்டி விட்டனர்.ஆலவாய் என்பது முதலில் நான்மாடங்களுள் ஒன்றன்பெயராகவே யிருந்தது. நான்மாடப் பெயர்களை, "அவைதிருவாலவாய் திருநள்ளாறு திருமுடங்கை திருநடுவூர்.இனிக் கன்னங் கரியமால் காளி ஆலவாய் என்றுமாம்"என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. (கலித்.92,உரை).

சமற்கிருத ஆக்கம்

வேத ஆரியர் என்றுசொல்லப்படும் இந்திய ஆரியர் இந்தியாவிற்குட்புகுந்தவுடன் தம் (கிரேக்கத்தை யொத்த) மொழியைமறந்துவிட்டனர். இதற்கு அவர் சிறுதொகையினராயிருந்ததும் பழங்குடி மக்களுடன் கலந்து போனதுமேகரணியம்.

ஆரியப்பூசாரியரும் அவரைப் பின்பற்றியவிசுவாமித்திரன் போன்ற ஒருசில நாட்டுமக்களும்,பாடிய மந்திரத் தொகுதி என்னும் பாடற்றிரட்டேஇருக்கு வேதமாம். அதன் மொழி, மறந்துபோன கீழையாரியமும் வடநாட்டுத் திரவிடமாகியபிராகிருதமுங் கலந்த