மொழியாம். அக்கலப்பினால், இந்திய ஆரிய மொழி எகர ஒகரக்குறில்களையும் இழந்தது. ஆரியப்பூசாரிகளான பிராமணர் தென்னாடு வந்து தமிழரொடுதொடர்பு கொண்டபின். வேதமொழியுடன் ஏராளமானதிரவிடச் சொற்களும் தமிழ்ச்சொற்களும்அவற்றினின்று திரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானபுதுச்சொற்களும் இடுகுறிச் சொற்களும் கலந்து,கலவை மொழியில் இதிகாச புராணங்களும் தருமசாத்திரங்களும் நாடகங்களும் பிறவும்இயற்றப்பட்ட பின்னரே, கி.மு. 6ஆம்நூற்றாண்டுபோல் சமற்கிருதம் என்னும் அரைச்செயற்கையான இலக்கிய நடைமொழி நிறைவாகஉருவாயிற்று. பிராகிருதம் (பிராக்ருத) என்பதுமுந்திச் செய்யப்பட்டது என்றும், சமற்கிருதம் (ஸம்ஸ்க்ருத)என்பது கலந்து செய்யப்பட்டது என்றும் பொருள்படுவனவாகும். இந்தைரோப்பியம்,வேதியம், சமற்கிருதம் என்னும் மூவேறு நிலைகளில்,ஆரியம் தமிழ்ச்சொற்களைக் கடன் கொண்டுள்ளது.வேதியம் கடன்கொண்டது வடநாட்டுப் பிராகிருதவாயிலாக வென்றறிக. வடமொழி என்னும் பெயர்வேதமொழிக்கும் சமற்கிருதத்திற்கும் பொதுவாகும்.பைசாசி, சூரசேனி, மாகதி என்று வடநாட்டில் மூன்றும்,திராவிடி என்று தென்னாட்டில் ஒன்றுமாக,பிராகிருதம் நான்கென வகுத்தனர். வேதமொழிபோன்றே சமற்கிருதமும் நூன்மொழியாகும். அதுபிறந்ததுமில்லை; இறந்ததுமில்லை. ஒரு மொழிக்குஉயிர் உலக வழக்கே. சில பல பண்டிதர் பல்லாண்டுவருந்திக் கற்றுச் சமற்கிருதத்திற் பேசுவதனால்,அது உயிர்மொழியாகிவிடாது. அது உயிர்மெய்யு மன்று;சவமுமன்று; வல்லோன் புனைந்த பாவை போன்றதே. உலக வழக்குமொழிகளா யிருந்து இறந்து போனவற்றை மட்டுமன்றி,சென்ற நூற்றாண்டு மேலை மொழியறிஞர் புனைந்தஎசுப்பெராந்தோ (Esperanto), நோவியல் (Novial) முதலியசெயற்கை மொழிகளைக்கூடக் கற்றுப் பேசக்கூடியவர்உலகிலுள்ளனர். மறையியலாகமட்டுமுள்ள வேதமொழிக்கு இலக்கணம் வகுத்ததுஐந்திரம் என்றும், மறையியலும் (வைதீகமும்)உலகியலும் (லௌகீகமும்) கலந்த சமற்கிருதமொழிக்கு இலக்கணம் வகுத்தது பாணினீயம் என்றும் அறிதல் வேண்டும். பாணினீயம்
சமற்கிருதத்தின்தலைசிறந்த இலக்கண நூலாகிய பாணினீயம்பாணினியால் கி.மு.4ஆம் நூற்றாண்டில்இயற்றப்பட்டது. இலக்கணநூலை வியாகரணம் என்பர்வடநூலார். அது கூறுபடுப்பு
|