பக்கம் எண் :

6தமிழர் வரலாறு-2

வகரம் ககரமாகத் திரிதல் இயல்பு.

எ-டு: ஆவா - ஆகா, சிவப்பு - சிகப்பு, துவர் - துகர்.

இம் முறையில், எவ் - வெ - கெ என்று திரிந்து, பிராகிருதம் என்னும் வடதிரவிடத்திலும் ஆரிய மொழிகளிலும் வினாவடி ககரமா யமையும்.

எ-டு : இந்தி - கோன் = யார், கஹான் = எங்கே.

இலத்தீன் - qui = எது, quot = எத்தனை.

சமற்கிருதம் - குத்ர = எங்கே, கிம் = என்ன.

தன்மை யொருமைப் பெயர்

இந்தி 

 சமற்கிருதம்  இலத்தீன்  ஆங்கிலம்

முதல் வேற்றுமை மைன் 

அஹம் 

(ego)எகொ 

இக், ஐ

இரண்டாம்

 " 

முஜே 

மாம், மா

 மே 

மீ

மூன்றாம்

முஜ்ஸே  

மயா

-

நான்காம்

 " 

முஜ்கோ 

மஹ்யம், மே 

மிஹி 

-

ஐந்தாம்

 " 

முஜ்ஸே 

மத் 

மே 

-

ஆறாம்

 " 

மேரா 

மம 

மெயீ 

மை

ஏழாம்

 " 

முஜ்மே 

மயி

-

சூரசேனிப் பிராகிருதத்தின் வழிவந்தஇக்கால மொழி இந்தி. அதில் நான் என்பது மைன்என்றும், நாம் என்பது ஹம் என்றும் திரிந்துள்ளன.தன்மைப் பன்மைப்பெயர் சூரசேனியில் ஹாம்என்றிருந்திருத்தல் வேண்டும். அது பின்னர்வடமொழியில் அஹம் என்றும், இலத்தீனிலும்கிரேக்கத்திலும் (அக) - (எக) - எகொ - எகோ (Gk.ego) என்றும் திரிந்ததாகத்தெரிகின்றது.

மெய்ம்முதற் சொற்கள் முதற்குறைத்திரிபால் உயிர் முதலாவது இயல்பே. எ-டு: மேழகம் -ஏழகம்.

ஆகும் என்பதன் திரிபான ஆம் (yes)என்னும் தமிழ்ச்சொல், வடமொழியில் ஆம் என்றேதிரியாதிருக்கவும், இந்தியில் ஹாம் என்றுதிரிந்துள்ளது. ஆதலால், நாம் - ஆம் - ஹாம் என்னும்திரிபு இயற்கைக்கு மாறான தன்று.

வடமொழியிலும் மேலையாரியமொழிகளிலும், தன்மை யொருமைப் பெயர் அகர அல்லதுஎகர முதலாயிருப்பினும், அதன் ஏனைவேற்றுமைகளெல்லாம் மகர முதலாகவே யிருப்பதால்,அதன் எழுவாய் வேற்றுமையும் முதற்கண் மகர முதலாகவேயிருந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும்.