ஒன்றையொன்றுஅடுத்திருப்பதனாலும், கிரேக்கப் பேரரசை அடுத்துஉரோமப் பேரரசு தோன்றியமையாலும், பின்னர் தன்தொடர்ச்சியான பிசந்தியப் பேரரசின்காலத்தில் கிரேக்கர் தம்மை உரோமர் என்றும்தம் மொழியை உரோமேயம் (Romaic)என்றும் சொல்லிக் கொண்டமையாலும்,இலத்தீனுக்கும் கிரேக்கத்திற்கும் பல சொற்கள்பொதுவாயிருப்பதனாலும், இருமொழியும் மிகநெருங்கியவை என்பது அறியப்படும். இலக்கியவளர்ச்சியிலும், அரசியல் வளர்ச்சியிலும்கிரேக்கம் முந்தியதே ஆயினும், மொழிநிலையில்இலத்தீன் முற்பட்டதாகும். கெலத்தியம், செருமானியம்(தியூத்தானியம்), இத்தாலியம், எல்லெனியம்(கிரேக்கம்), பாலத்தோ-சிலாவியம், அல்பானியம்,அர்மீனியம், ஈரானியம், இந்தியம் எனத் தொண்பெருங்கிளை களையும், வேறு சில சிறு கிளைகளையுங்கொண்டது ஆரியம் என்னும் மொழிக்குடும்பம்.பெருங்கிளைகளுள் முதல் நான்கும் இறுதி ஒன்றுமே,தமிழ்த் திரிபாராய்ச்சிக்குச் சிறந்தவையாகும். ஆரியம் என்பது, இனவகையில்ஐரோப்பாவில் தோன்றிய ஆயினும், மொழிவகையில்இந்தியாவிலேயே தொடங்கப்பட்டது. அதன்தொடக்கநிலை வடுகு என்னும் தெலுங்கே. வடுகு என்பதுவடகு என்பதன் திரிபாகும். வடகு வடமொழி. ஆகவே,தெலுங்கு பெயராலும் திரிபாலும் வடமொழி என்னும்சமஸ்கிருதத்தை ஒருபுடை ஒத்ததாம். ஆரியத் தன்மை யடைந்த தெலுங்குத்திரிபுகள் 1. உரப்பொலி எ-டு: செய் - ceyi. 2. எடுப்பொலி எ-டு: குடி (வீடு, கோயில்)-gudi, சப்பு - ஜப்பு (b), தகை (தாகம்) - daga, புகா (சோறு) - buvva. 3. மெலிவலி யிணை வலிப்பு எ-டு: inga (இன்னும்), mancu (மூடுபனி), enta (எவ்வளவு), mantta (மண்ட்ட) - தீக்கொழுந்து, gampu (கும்பு). தமிழில், ங்க (nga), ஞ்ச (nja), ண்ட (-da), ந்த (nda), ம்ப (mba) என்ற மெலிவலி மெய்ம்மயக்கே இயலும். 4. தன்மை முன்னிலைப் பெயர்களின் நகரமுதல் மகரமாதல் எ-டு: நாம் - மனமு, நீர் - மீரு. 5. வினாவடி ககரமாகத் திரிதற்கு வழிவகுத்தல் எ-டு: எவற்றினை - வேட்டினி, எவற்றின் - வேட்டி.
|