கூடும்.ஆயின், அவன் முன்னோரே அதை விட்டுவிட்டதனாலும்,நாட்டை வளம்படுத்தும் நீர் வணிகத்திற்குப்பூம்புகார் போல் ஒரு துறைநகரே ஏற்றதாயிருந்ததனாலும், கொடுங்கோளூரிலேயேநிலைத்துவிட்டான். திருமால் கோவிலாகியஆடகமாடம், கருவூரிற் போன்று கொடுங்கோளூரிலும்கட்டப்பட்டிருத்தல் வேண்டும். அக்காலத்திற்பொன்னிற்குப் பஞ்சமில்லை. செங்குட்டுவன்காலத்திற் கொங்குநாட்டுப் பகுதியையாண்ட சேரர்குடியினர், தகடூர் அதிகமான் சரவடியினரே. நெடுஞ்செழியன் ஆரியப்படையைவென்றிருந்ததனாலும், செங்குட்டுவன் படைகங்கையைக் கடத்தற்கு நூற்றுவர் கன்னர்(சாதகர்ணி? சாதவாகனர்?) உதவியதனாலும்,கி.பி.2ஆம் நூற் றாண்டில் ஆந்திரப் பேரரசிற்குத்தமிழ்நாடு உட்பட்டிருந்த தென்று கொள்ளஇடமில்லை. கடைக்கழக முடிவு
கி.பி.3ஆம் நூற்றாண்டில், உக்கிரப்பெருவழுதி காலத்தில், பாண்டிய வரசும்கடைக்கழகமும் குலைந்தன. முதலிரு கழக இலக்கியமும் முற்றும்ஆரியரால் அழியுண்டத னால், இக்காலத்திற் சிலர்கடைக்கழகம் ஒன்றே இருந்ததெனக் கருதுவர்.வையாபுரிகளோ, அதுவுமிருந்த தில்லையென்றும்,கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மதுரையில் தோன்றிய சமணசங்கம் ஒன்றே தமிழகத்திலிருந்த பண்டைத்தமிழ்க் கழகம் என்றும் கூறுவர். 10ஆம் நூற்றாண்டினரான பட்டினத்து அடிகள்கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்னும்வடசொல்லும் பெரிய சங்கைக் குறிக்கும் சங்கம்என்னும் தென்சொல்லும் வடிவொத் திருப்பதால்,சங்கைப் பயன்படுத்தும் காலம் நோக்கி அதைமூன்றாக்கி, "முதற்சங் கமுதூட்டும் மொய்குழலா ராசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம் ஆம்போ ததுவூதும் அம்மட்டோ இம்மட்டோ நாம்பூமி வாழ்ந்த நலம்" | (பொது) |
என்னும் வெண்பாவில், பண்டைத்தமிழ்க் கழகம் மூன்றென்பதைக் குறிப்பாகவுணர்த்துதல் காண்க. நல்விலங்கு பூட்டும் என்றதுதிருமணத்தன்று ஊதப்பட்டதை. அக்காலத்தில் மங்கலவினைக்கும் சங்கூதப்பட்டது. ஆம்போது என்றதுஇறந்தபின் ஊதப்படும் வேளையை. மூவிடத்தும்சங்கம் என்னும் வடிவே அமையுமாறு, முதற்சங்கம்பாலூட்டும் என்று பாடியிருக்கலாம். ஆயின்,பாலூட்டுவது சிறு சங்காதலால், அதைச் சங்கு என்றுகுறித்தார்.
|