பக்கம் எண் :

தமிழர் வரலாறு-265

கடைக்கழகக் காலக் குறுநில மன்னர்

அகுதை, அத்தி, அதிகமான், தகடூர் பொருதுவீழ்ந்த எழினி, அதிகமான் நெடுமானஞ்சி,அதிகமான் நெடுமானஞ்சி மகன் பொகுட் டெழினி,அந்துவஞ் சாத்தன், அந்துவங்கீரன், அம்பர்கிழான் அருவந்தை, அவியன், ஆதனழிசி, ஆதனுங்கன்,ஆந்தை, ஆமூர் மல்லன், ஆய் அண்டிரன், இயக்கன்,இருங்கோவேள், இளங்கண்டீரக்கோ, இளங்குமணன்,இளவிச்சிக்கோ, இளவெளி மான், ஈர்ந்தூர்(ஈந்தூர்), கிழான் தோயன் மாறன், எயினன், எழினி,ஏற்றை, ஏறைக்கோன், ஏனாதி திருக்கிள்ளி,ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன், ஓய்மான்நல்லியக் கோடன், ஓய்மான் வில்லியாதன்,கங்கன், கட்டி, கடிய நெடுவேட்டுவன்,கண்டீரக்கோப்பெரு நள்ளி, கந்தன் (நாஞ்சிற்பொருநன்), கரும்பனூர்கிழான், குமணன், கொண்கானங்கிழான், சிறுகுடிகிழான் பண்ணன், சோழநாட்டுப்பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன், சோழியவேனாதி திருக்குட்டு வன், தந்துமாறன்,தருமபுத்திரன், தழும்பன், தாமான் தோன்றிக்கோன், தென்பரதவர், தேர்வண் மலையன்,தொண்டைமான், நம்பி நெடுஞ்செழியன், நன்னன்,நன்னன் சேய் நன்னன், நாஞ்சில் வள்ளுவன்,நாலைகிழவன் நாகன், நெடுவேளாதன், பழையன்,பிட்டங் கொற்றன், புல்லி, பூந்துறை (புன்றுறை),பொறையாறு கிழான், மல்லிகிழான் காரியாதி,மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்,மலையமான் திருமுடிக்காரி, முக்காவல் நாட்டு ஆமூர்மல்லன், முதியன், மூவன், மையற்கோமான் மாவன்,மோகூர்ப் பழையன், வல்லார்கிழான் பண்ணன்,வல்வில் ஓரி, வாட்டாற்றெழினி யாதன்,விச்சிக்கோன், வெளிமான், வேங்கை மார்பன்,வேள் எவ்வி, வேள் பாரி, வையாவிக்கோப்பெரும்பேகன் முதலியோர்.

இவருள், தொண்டைமான், நன்னன் முதலியசிற்றரசரும், வள்ளல்களும் முடியணிந்தவராவர்.கடைக்கழகக் காலத்திற் பொதுவாக மூவேந்தர்கைகளும் தாழ்ந்துவிட்டதனால், குறுநில மன்னர்தலையெடுத்து முடியணிந்துகொண்டனர். சேரன்செங்குட்டுவன் ஏழரசரை வென்று, அவர் முடிகளைமாலையாக அணிந்திருந்தான். அவ் வெழுவருள் ஐவர்குறுநில மன்னர்.

"வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை" 

(குறுந்.328)

என்பது, குறுநில மன்னன் வேந்தரைஎதிர்த்ததைக் கூறுதல் காண்க.

குறுநில மன்னருட் பெருவள்ளல்கள்

அதிகமான், ஆய், ஓரி, காரி, நள்ளி,பாரி, பேகன், குமணன், நல்லியக்கோடன் என்பவர்பெருவள்ளல்கள். இவருள் முதலெழுவர்