பக்கம் எண் :

70தமிழர் வரலாறு-2

"யாம விரவின் நெடுங்கடை நின்று
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோ லகவுநர் வேண்டின் வெண்கோட்
டண்ணல் யானை யீயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்" 

(அகம்.208)

என்பதனால், அவன் கொடைத்திறம்விளங்கும்.

பதிற்றுப்பத்தின் 2ஆம் பதிகம்,இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனை, "உதியஞ்சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்" என்கின்றது. அவ் வேண்மாள் வெளியன்மரபினள் போலும்.

பிட்டங்கொற்றன்

கொண்கானத்திற்குக் கிழக்கில்,குடமலைத் தொடரிலுள்ள குவடுகளுள் ஒன்று குதிரைமலை.அம் மலைநாட்டை யாண்டவன் பிட்டங்கொற்றன்.

"அருவி யார்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல்
நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பில் தமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே" 

(புறம். 168)

என்னும் கருவூர்க் கந்தப் பிள்ளைசாத்தனார் பாட்டும்,