பக்கம் எண் :

தமிழர் வரலாறு-269

"நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்தபொன் 

(அகம்.258)

என்பதனாலும் அறியப்படும். பாழிப்பொன் கவர அடிக்கடி போர் நிகழ்ந்ததனால் அந்நகர் செருப்பாழி எனப் பெயர் பெற்றதுபோலும்!

ஏழில்மலை என்பதைப் பிராமணர் சத்தசைலம் (ஸப்த சைல) என மொழிபெயர்த்தனர்.பின்னர் ஏழில்மலை என்பது எலிமலை எனத்திரிந்தபோது, ஏழில்மலை நாட்டை அவர் மூசிகநாடுஎன்றனர். மூசிகம் (மூஷிக) என்பது எலியைக்குறிக்கும் வடசொல். பாழிச்சிலம்பு என்பது பாழிக்கல்என்றும் வழங்கும். அது இன்று பாட்கல் எனத்திரிந்துள்ளது. வியலூர் என்பது, இன்று கன்னடமொழியியல்பிற்கேற்பப் பெயிலூர் (Bailur)என்று வழங்குகின்றது.

கொண்கானத்தின் கடலோர வடபகுதிதுளுநாடு எனப்படும். அங்குத் தோகைக்கா என்றஊருள்ளது. மயில்கள் நிறைந்த சோலையினால் அவ்வூர் அப் பெயர் பெற்றது.

"..................பறைக்கண் பீலித்
தோகைக் காவின் துளுநாட் டன்ன" 

(அகம்.15)

பாழிச் சிலம்பும் மயிலுக்குப் பெயர்பெற்ற தென்பது,

"ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயிற் கலாவத் தன்ன" 

(அகம்.152)

என்பதனால்அறியப்படும். தோகைக்காஎன்பது தோக்கா என மருவி, இன்று சோக்கு (ஜோக்)எனத் திரிந்துள்ளதாகப் பேரா. ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையார் கூறுவார்.

கொண்கானம் என்பது கடைக்கழகக்காலத்திலேயே கொங் கணம் எனத் திரிந்துவிட்டது."கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா?"என்று திருவள்ளுவர் மனைவியார் கூறியதாகக்கதையுண்மையும், "கொங்கணர் கலிங்கர்கொடுங்கரு நாடர்" என்று சிலப்பதிகாரம்(25:156)கூறுவதையும் காண்க.

வெளியன் வேண்மான் ஆய் எயினன்

கொண்கானத்தின் தென்கீழ்ப் பகுதி புன்னாடுஎனப்பட்டது.. அதை ஆண்ட வெளியன் வேண்மானார்மரபில் வந்தவன் வெளியன் வேண்மான் ஆய் எயினன்.அவன் தலைநகர் வாகை.

"வண்கை எயினன் வாகை யன்ன" 

(புறம்.351)