என்பதில், எருமை என்பது வடுகர் தலைவன்ஒருவனின் பெயரைக் குறித்ததேயன்றி, அவனைஎருமைநாட்டொடு தொடர்புபடுத்திய தன்று. எருமைக்கு வடமொழியில் மகிசம் (மகிஷ)என்று பெயர். அதனால் எருமையூர் என்பதைப்பிராமணர் மகிசபுரி என மொழிபெயர்த்தனர். அச்சொல் அதன் ஆங்கில வடிவையொட்டி இன்று மைசூர் எனவழங்குகின்றது. "மாவா ராதே" (273) என்னும்புறப்பாட்டைப் பாடிய எருமை வெளியனார்என்னும் புலவர், எருமையூரினராவர். "இருள்கிழிப்பதுபோல்" என்னும் 72ஆம் அகப்பாட்டைப் பாடியகடலனார் இவர் மகனார் ஆவர். நன்னன் எருமை நாட்டிற்கும் குடமலைக்கும்மேற்கிலுள்ள தென் கன்னடப்பகுதி, கொண்கானம்என்னும் பெயர்கொண்டதாகும். கொண்கு துறைமுகம்அல்லது கடற்கரை. கொண்கன் நெய்தல்நிலத்தலைவன். கொண்கானம் கடற்கரைநிலமாதலால் அப் பெயர் பெற்றது போலும்! கடைக்கழகக் காலத்தில்கொண்கானத்தை ஆண்டவன் நன்னன். அவன் தலைநகர்கடம்பின் பெருவாயில் என்பர். ஏழிற் குன்றம்என்னும் பெருமலையையும் பாழி, பாரம், வியலூர்,பிரம்பு என்னும் பேரூர்களையும் உடையதுகொண்கானம். அவ் வூர்களுள் பாழி ஒரு வல்லரண்நகர். அது ஏழில்மலையின் எழு குவடுகளுள் ஒன்றான பாழியைஅரணாகக் கொண்டதாகத் தெரிகின்றது. நன்னன் ஒருகொடையாளியாகவும் இருந்தான். "பொன்படு கொண்கான நன்னன் நன்னாட் டேழிற் குன்றம் பெறினும்" | (நற்.391) | "இசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ் பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில்" | (அகம்.152) | "சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி அன்ன கடியுடை வியனகர்" | (அகம்.15) | "நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூ ரன்ன" | (அகம்.97) |
நன்னன் வேளிர் மரபைச் சேர்ந்தவன்என்பது, வேண்மான் என்னும் பெயராலும்,
|