பக்கம் எண் :

தமிழர் வரலாறு-267

செம்பியனை ஆரியனென்றுகருதிக்கொண்டு, அவனைத் தலையெழு வள்ளல்களுள்ஒருவனாகக் கூறியுள்ளனர். அவன் தமிழகத்துச்சோழருள் ஒருவன் என்பது முன்னரே கூறப்பட்டது.இடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கொண்ட கன்னனைப்பெருமைப்படுத்த, கொடைக்குக் கன்னன் என்றும்,"கார்த்திகைக் கப்பால் மழையு மில்லை,கருணனுக் கப்பால் கொடையுமில்லை" என்றும்கூறுவர். "கொடுக்கனுக் கப்பால்மழையுமில்லை,குமணனுக் கப்பால் கொடையு மில்லை"என்றே பழமொழி வழங்கல் வேண்டும். கொடுக்கன் =தேள், நளி(கார்த்திகை) மாதம். கடைக்கழகக் காலவள்ளல்களின் தொகையை அடிப்படையாகக்கொண்டே,ஏனைக் காலத்தார் தொகையையும் ஏழேழாகவகுத்திருத்தல் காண்க.

அண்டிரன் என்பது கண்டீரன் என்பதுபோன்ற ஓர் இயற் பெயர். தமிழகத்தின்தென்கோடியிலுள்ள பொதியமலை நாட்டை ஆண்ட ஆய்அண்டிரன் தெலுங்கனல்லன். அண்டிரன் என்னுஞ்சொற்கு ஆந்திரன் என்னுஞ் சொல்லொடுதொடர்பில்லை.

வடபாற் குறுநிலமன்னர்

எருமையூரன்

இற்றை மைசூர் நாட்டின் பழம்பெயர்எருமை நாடு என்பது. எருமைகள் மிக்கிருந்ததனால் அந்நாடு அப் பெயர் பெற்றது. அதன் தலைநகர் எருமையூர்.அதிலிருந் தாண்டவன் எருமை யூரன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால்வெல்லப்பட்ட எழுவருள் எருமையூரனும் ஒருவன்.

"கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத் தகன்றலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி
நாரரி நறவின் எருமை யூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன்என்
றெழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்
முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக்
கொன்றுகளம் வேட்ட" 

(அகம்.34)

என்று நக்கீரர் பாடுதல் காண்க.

"நேரா வன்தோள் வடுகர் பெருமகன்
பேரிசை எருமை நன்னாட் டுள்ளதை" 

(அகம்.253)