பக்கம் எண் :

72தமிழர் வரலாறு-2

வேம்பாய்ப் (Bombay)பைதிரம் (பிரதேசம்) முழுதும் முன் காலத்தில்வேணாடா யிருந்தது. முன்னர் நைசாம் அரையத்தைச்சேர்ந்திருந்த எல்லோரா (Ellora),பழைய பட்டையங்களில் (சாஸனங்களில்) வேளூர்என்றும் வேளூரகம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.வேம்பாய்ப் பைதிரத்துச் சோழாபுரம் (Sholapur)மாவட்டத்தில் ஒரு நகர் வேளாபுரம்(Velapur)என்ற பெயர் கொண்டுள்ளது. அகமதுநகர் வட்டத்தில்வேளாபுரம் என்றும், பூனா மாவட்டத்தில் வேளகம்என்றும், பல நகரங்கள் உள்ளன. அப் பைதிரத்தைச்சேர்ந்த வேளகம் (வேள் கிராமம் (?)) என்னும்மாவட்டத் தலைநகர் பெல்காம் (Belgaum)என்றும், வேள்பட்டி என்னும் ஊர் பேல்ஹூட்டி (Belhutti)என்றும் வழங்குகின்றன. ஒய்சள மன்னரின்பட்டப்பெயரான பெல்லாள என்பது வேளாளன் என்பதன்திரிபாகவே கருதப்படுகின்றது.

தொடக்கக் காலத்தில், வேணாடுமராட்டிய நாட்டில் மட்டுமன்றி கூர்ச்சரத்திலும்பரவியிருந்தது. கத்தியவார் கச்சுப் (Cutch)பைதிரங்களில்,இன்றும் பலவூர்கள் வேளா என்பதன் திரிபான பேலா(Bela)என்னும் பெயர் கொண்டுள்ளன. அகத்தியர்துவராபதிப் போந்து பதினெண்குடிவேளிருள்ளிட்டாரைக் கொண்டுவந்தார் என்னும்நச்சினார்க்கினியர் கூற்றும், வேதக்காலத்தில்மராடமும் குச்சரமும் பஞ்சதிரவிடத்துள்அடக்கப்பட்டதும் இங்குக் கவனிக்கத்தக்கன.

பிற்காலத்துத் தோன்றிய சளுக்கியர்வேணாட்டை ஆண்ட தனாலேயே, "வேள்புல வரசர்சளுக்கு வேந்தர்" என்று திவாகரமும் பிங்கலமும்கூறுகின்றன.

கங்கர்

இற்றை எருமையூர் (மைசூர்) நாட்டின் ஒருபகுதியை, அஃதாவது, பண்டைக் குணகொங்கின்வடபாகத்தில் ஒரு பகுதியை, கங்கர் என்னும்மரபினர் கடைக்கழகக் காலத்திலேயே ஆண்டுவந்தனர்.

"துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி" 

(அகம்.44)

என்று அகப்பாட்டும்,

"பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்" 

(சிலப்.25:157)

என்று சிலப்பதிகாரமும் கூறுதல் காண்க.

கொங்கன் என்னும் பெயரே கங்கன்என்று திரிந்திருக்கலாம்.