கட்டியர் கங்கநாட்டிற்குக் கிழக்கிலிருந்தபண்டைக் குணகொங்குப் பகுதியைக் கங்கர்ஆண்டுவந்ததாகத் தெரிகின்றது. "குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும்" | (குறுந்.11) |
என்னுங் குறுந்தொகைப் பாட்டைநோக்குக. வடக்கிற் பல்லவர் தலையெடுத்தபின்பும், தெற்கில் அதிகமானர் கை தாழ்ந்தபின்புமே? கங்கநாடும் கட்டிநாடும் தெற்கே தள்ளிவந்திருத்தல் வேண்டும். காவிரிப்பூம்பட்டினம் கடலில்மூழ்கியமை சேரன் செங்குட்டுவன் பத்தினித்தெய்வத்திற்குப் படிமை நிறுவி விழா வெடுத்தபின்,காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது.அன்றோ அதற்குச் சற்றுமுன்போ குமரியாறும் கடலுள்மூழ்கிற்று. அதன்பின் தமிழகத்தின்தென்னெல்லையும் கடலாயிற்று. அதனால், "நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்" | (சிலப்.8:1) |
என்று பாடினார் இளங்கோவடிகள் கடைக்கழக் கால வாணிக வளர்ச்சி நிலவணிகமும் நீர்வணிகமும்கடைக்கழகக் காலத்திற் பெரு வளர்ச்சியடைந்திருந்தது. சட்டை யணிந்தவரும் பாதக்கூடு (boots)மாட்டியவருமான மேலையாசியரும் மேனாட்டாரும்,மிளகுபொதிகள் கொண்டு செல்லும் கோவேறு கழுதைச்சாத்தொடு கூடி, மலைபடு செல்வமுங் கடல்படுசெல்வமுமான பல அரும்பொருள்களை, அரசன் நிறுத்தியவிற்படைஞர் இரவும் பகலுங் காத்திருக்கும் சுங்கப்பெருவழிகளிற் சென்று விற்றுத் திரிந்தனர். "மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉம் அரும்பொரு ளருத்துந் திருந்துதொடை நோன்றாள் அடிபுதை யரணம் எய்திப் படம்புக்கு" ............................................................ உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர் அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் .............................................................. வில்லுடை வைப்பின் வியன்காட் டியவின் | (பெரும்பாண்:67-82) |
|