கடாரம் (பர்மா), மலையா முதலியகீழைநாடுகட்கும், சுமதுரை சாலி (சாவகம்) முதலியகீழைத்தீவுகட்கும், நீர்வாணிகர் சென்று வணிகம்செய்து வந்தனர். அவர் இக்காலத்துநாட்டுக்கோட்டைச் செட்டிமார்போல் தங்கள்குடும்பங்களை இங்கேயே விட்டுச் சென்றனர். இவ்வழக்கம் கி.மு. 7ஆம் நூற்றாண்டிற்கு முன்னரேஇருந்ததென்பது, "முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை." | (தொல்.980) |
என்னும் தொல்காப்பிய நூற்பாவால்அறியப்படும். கீழ்கரையி லிருந்த கொற்கை தொண்டிபுகார் முதலிய துறை நகரங்களுள், புகார் மிகப்பெரிதாகவும் உலகிலேயே தலைசிறந்த தாகவும்இருந்தது. அது காவிரிக் கயவாயில் அமைந்த அழகியதுறைநகரமாதலால் காவிரிப்பூம்பட்டினம் என்றும்,அவ்வாறு கடலிற் புகும் இடத்திலிருந்ததனால் புகார்என்றும் பெயர் பெற்றது. துறைநகரைப் பட்டினம்என்பது பண்டை வழக்கு. பதி - பதனம் - பத்தனம் -பட்டனம் (பட்டணம்) - பட்டினம். "கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும் கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்" | (சிலப்.5:9-12) | "மொழிபெயர் தேத்தோர் ஒழியாவிளக்கமும்" | (சிலப்.6:143) |
என்பவற்றால், உலகெங்கணுமுள்ள பல்வேறுநாட்டுமக்கள், காவிரிப் பூம்பட்டினத்தில்,தங்கள் நாட்டுப் பொருள்களுடன் தங்கியிருந்தமைஅறியப்படும். யவன ரென்பார் கிரேக்கரும்உரோமரும். மேல்கரையி லிருந்த முசிறி தொண்டிமாந்தை முதலிய துறைநகர்களுள், சுள்ளியம்பேரியாற்றுக் கயவாயிலிருந்த முசிறி சிறந்ததாயிருந்தது. "சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி" | (அகம்.149) |
பாண்டியன் உரோம நாட்டுத் தொடர்பு பாண்டியன் அகத்தசு (Augustus-கி.மு.44 - கி.பி.14) என்னும் உரோம நாட்டுப் பேரரசனுக்குத்தூது விடுத்ததாகவும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.ஏற்கெனவே இரு நாடுகட்கும் இடையே இருந்த வாணிகத்தொடர்பொடு
|