கொம்பு - கொப்பு - கப்பு - கப்பல் = பல கிளைகளைக் கொண்ட பாய்மரமுள்ள கலம். நாவி, நாவாய்-L. navis, navia, OF. navie, ME. navie, E. navy. Gk. naus. நங்கூரம்-Gk. agkura, L. ancora, OE. ancor, E. anchor, Pers. langar. ஆங்கில அகரமுதலியில், இச் சொற்குagk(hook)என்னும் கிரேக்கச் சொல் மூலமாகக்காட்டப்பட்டுள்ளது. அச் சொல்லும் அங்கு என்னும்தென்சொல்லின் திரிபே. அங்குதல் = வளைதல். அங்கு- அங்கணம் = வாட்டமான சாய்கடை.
முதன்முதல் தமிழகத்தினின்றேமேனாடுகட்குச் சரக்குகள் ஏற்றுமதியாயினஎன்பதற்கு,
அரிசி, இஞ்சி என்னும் இரு சொற்களேபோதிய சான்றாம்.
அரு - அரி = | 1. |
சிறுமை. அரிநெல்லி(சிறுநெல்லி). | | |
2. | நுண்மை. "அரியே ஐம்மை." | (தொல்.
839) | | 3. |
அரிசி. "அரிசியும் வரியும்
அரியென லாகும்" | (பிங்.) |
அரி - அரிசி = 1. சிறியது. அரிசிப் பல்(சிறுபல்). 2. நெல் புல் (கம்பு)
முதலிய கூலங்களின்உள்ளீடு.
அவரை துவரை முதலிய பயற்றம் பருப்புகளைநோக்க, நெல் புல் முதலிய தவசங்களின்
அரிசிசிறியதாயிருத்தல் காண்க.
அரிசி-E. rice, ME. rys, Fris. rys, Du. rijst, rijs, rys, MLG. riis, ris,
MHG. ris, G. reis, MSw. riis, Sw. and Da. ris, OF. ris, F. riz, It. riso,
L. oriza, oryza, Gk. oruza, oruzon, Sp. and Pg. arroz, Arab. aruz, uruz.
Bot. n. L. Oryza sativa.
நெல் தொன்றுதொட்டுத் தமிழகத்துவிளைபொருள் என்பதும், அரிசி
முதன்முதல்தமிழகத்தினின்றே மேனாடுகட்கு ஏற்றுமதியானதென்பதும் வெளிப்படை.
அங்ஙனமிருந்தும்,எருதந்துறை ஆங்கிலப் பேரகர முதலியில் (O.E.D.),'அரிசி'
தமிழ்ச்சொல் லென்று குறிக்கப்படாது, "probablyof Oriental origin",
என்றும்எருதந்துறைச் சிற்றகர முதலியில் (C.O.D.), "of oriental
orig."என்றும் மட்டுமே குறிக்கப் பட்டுள்ளது. இதற்குக் கரணியமா யிருந்தவர் ஆரியர்மட்டுமல்லர்; அவரடியா ரான வையாபுரிகளும் தன்னலப்புலிகளும் வணிகப் புலவருமாவர். அண்ணாமலைபல்கலைக் கழகத்திற் பத்தாண்டு கட்கு முன்னரேஎன்னால் தொகுக்கப்படவிருந்த செந்தமிழ்ச்சொற் பிறப்பியற் பேரகர முதலி,சேதுப்பிள்ளையால் தடுக்கப்பட்டு விட்டது. அதைஇன்னும் அப் பல்கலைக்கழகம் உணரவில்லை.
|