பக்கம் எண் :

78தமிழர் வரலாறு-2

என்பவற்றால், திருமாலின் பலதோற்றரவுக் கொள்கை புகுத்தப் பட்டதுதெளிவாகின்றது.

"கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே” 

(புறம்.கட.வா.)

என்பது, ஒரு கட்டுக்கதையால் சிவனைஆரியப்படுத்தும்.

"நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே"

(புறம். கட. வா.)

என்பது, சிவபெருமானுக்குப் பிராமணவடிவேற்றுந் தொடக் கத்தைக் காட்டும்.

திருமுருகாற்றுப்படை, கந்தபுராணக்கட்டுக்கதையால் முருகன் ஆரியத்தெய்வமாக்கப்பட்டதைத் தெரிவிக்கும்.

தெய்வம்பற்றிய பரிபாடற்பாக்களால், ஆரியத் தெய்வங்க ளெல்லாம்தமிழகத்துட் புகுத்தப்பட்டதை அறியலாம்.

"தெய்வ மால்வரைத் திருமுனி யருள
.......................................
தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை" 

(சிலப்.3:1-7)

என்பதனால், ஒரு வரலாற்று மகளும்ஆரியத் தொல்கதைத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.

ஏமாற்று

நோயால் இறந்த அரசருடம்பைப்பிராமணன் தருப்பையிற் கிடத்தி வாளால் வெட்டி,அவருயிரை விண்ணுலகத்திற் கேற்றும் வாள்போழ்ந்தடக்கலும்; பாலைக் கௌதமனார், பத்துப் பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வி வேட்கையில்,தம் மனைவி யாருடன் விண்ணுலகடைந்தா ரென்பதும்;பாண்டியன் அரசியற் பணியாளர் வார்த்திகனைச்சிறையிலடைத்தவுடன், காளிகோயிற் கதவம் தானேசாத்திக்கொண்ட தென்பதும் துணிச்சலான ஏமாற்றுவினைகளாம்.

பொருள் கவர்வு

தமிழ வேந்தரின் பொற்செல்வப்பெருக்கையும் ஏமாளித் தன்மையையுங் கண்டபிராமணர், அவரிடமிருந்து இயன்றவரை பொன்னும்நிலமும் பறிக்கத் திட்டமிட்டுப் பதினாறுதானங்கள் வகுத்துள்ளனர். அவையாவன:

(1)  துலாபுருடதானம்  ஆள்நிறைப் பொற்கொடை.
(2)  இரணிய கருப்பதானம்  பொற் கருப்பைக் கொடை.