பக்கம் எண் :

தமிழர் வரலாறு-279

(3) 

பிரமாண்ட தானம்  பொன் நிலவுருண்டைக் கொடை.

(4) 

கல்ப பாதப தானம்  விண்மரப் பொற்கொடை

(5) 

கோசகசிரம்  ஆயிர ஆக் கொடை.

(6) 

இரணிய காமதேனு தானம்  பொன்னாக் கொடை.

(7) 

இரணியாசுவ தானம்  பொற்குதிரைக் கொடை.

(8) 

இரணியாசுவரத தானம்  பொற்குதிரைத் தேர்க்கொடை.

(9) 

ஏமாத்தித தானம்  பொன்யானைத் தேர்க் கொடை.

(10) 

பஞ்சலாங்குல பூதானம்  ஐயேர் நிலக்கொடை.

(11) 

தரா தானம்  பொன்நிலக் கொடை.

(12) 

விசுவ சக்கர தானம்  வியனுல காழிப் பொற்கொடை.

(13) 

மகா கல்ப லதா தானம்  பெருவிண்கொடிப் பொற்கொடை.

(14) 

சப்த சாகர தானம்  எழுகடற் கொடை.

(15) 

இரத்தினதேனு தானம்  மணிப்பொன் னாக்கொடை.

(16) 

மகா பூத கடதானம்  ஐம்பூதப் பொற்கலக் கொடை.

இவற்றுள் விண்மரப் பொற்கொடை ஒருகுதிரை வேள்விக்குச் சமம் என்றும்,பொற்குதிரைத் தேர்க்கொடையால் தீவினையனைத்தும் நீங்குமென்றும் சொல்லப்பட்டது.

பொற்கருப்பைக் கொடை என்பது,பொன்னால் ஆவுருச் செய்து அதனூடு புகுந்துவெளிவந்தபின் அதனைப் பிராமணனுக்குக் கொடுப்பது.பொன்னாப் புகல் மறுபிறப்பிற்கு ஒப்பானதென்றும், அதனால் தீவினை நீங்கி வாழ்நாள்நீடிக்கும் என்றும் கருத்து. ஓர் ஆள் புகுந்துவெளிவருமளவு ஆவுருவம் செய்வதற்கு, எத்துணைப் பொன்வேண்டுமென்றும், அதைப் பெறுபவனுக்கு அது எத்துணைப்பெருஞ்செல்வமென்றும் எண்ணிக் காண்க.

பொன்னிலக் கொடை யென்பது நாவலந்தீவம்போல் அமைத்த திண்ணிய பொற்கட்டைக்கொடுப்பது.

எழுகடற் கொடை என்பது நன்னீர்,உவர்நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறுஆகியவற்றை எழு குண்டங்களில் நிரப்பிச்சடங்குசெய்து கொடுப்பது.

பிராமணருக்குக் கொடுக்கும்நிலத்திற்குப் பிரமதாயம் என்றும்,ஊர்க்குப் பிரமதேயம் என்றும் பெயர்.