குறிக்கப்பட்ட சிலப்பதிகாரம்இறந்துபடாமல் உள்ளது. இன்னும் எத்தனைபிராமணர்க்கு எத்தனை வேந்தர் எத்தனை முறைஅத்தானம் வழங்கினரோ, அறியோம். (2) குமுகாயத்துறை பிராமண வுயர்த்தம் தொடக்கத்தில் பூணூலும் குண்டிகையும்முக்கோலும் மணையும் கொண்டு திரியும் நாடோடிப்பிராமணர்க்கும், பின்னர் வேதமோதிய எல்லாப்பிராமணர்க்கும்,தமிழ்த் துறவியர்க்குரியஅந்தணன் முனிவன் என்னும் பெயர்களை மட்டுமன்றி,இறைவனுக்குரிய பகவன் கடவுள் என்னும்பெயர்களையும், ஆரியரும் தமிழரும் வழங்கத்தலைப்பட்டு விட்டனர். தம்மை அந்தணரென்று பெருமையாகச்சொல்லிக்கொண்ட கபிலர், வேதம் ஓதினவரோஅல்லரோ அறியோம். பொதுவாக, பார்ப்பான்என்னும் பெயர் இல்லறத்தார்க்கும், அந்தணன்என்னும் பெயர் துறவறத்தார்க்கும் உரியனவாகும்.வேள்வித்துறை முற்றிப் பார்ப்பன வாகை சூடிய,சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான்கௌணியன் விண்ணந்தாயனும், அந்தணன் என்னும்பெயரை மேற்கொண்டிலன். "அறுவகைப் பட்டபார்ப்பனப் பக்கமும்" என்றே (1021)தொல்காப்பியருங் கூறுகின்றார். அங்ஙனமிருந்தும்,பாரியொடு பழகினவரும், "புலவு நாற்றத்த பைந்தடி பூநாற்றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு" | (புறம்.) |
வந்தவருமான கபிலர் தம்மை அந்தணர்என்றது, இக்கால நிலைக்கு இயல்பாயினும் அக்காலநிலைக்கு வியப்பானதே.
|