முதன்மை வினைகள்:ஈன்-ean, yean உருள்-whirl,ஒழுகு-walk, கரை - cry,காண் (அறி) - kon, ken, con,குந்து- squat, கொல்-ME.culle, kille, E. kill, OE. cuell, E.quell, சப்பு- sup,sip, தின்-dine,துப்பு-spit, துருத்து-thrust,தொள்-till, நாடு-OE.neod, E.need, பொள்-பொளி-bore,பொறு-OE., OS., OHG., ber, E.bear,முன்(னு) - mun (to think),விக்கு - விக்கல்-hiccup. துணைவினைகள்: இரு- are(வடசெருமானியம்). arem - am(இருக்கிறேன்). art =இருத்தி (இருக்கின்றாய்). இரு-is(தென்செருமானியம்). பூ-beபூத்தல் = தோன்றுதல், உண்டாதல், இருத்தல். "பூத்தலிற் பூவாமை நன்று" | (நீதிநெறி. 6) |
புகு - பொகு - பொகில் = அரும்பு. பொகில்- போகில் = அரும்பு. பொகு - போ - போத்து =புதிதாகத் தோன்றுங் கிளை. போத்து வெடித்தல்என்பது மரபு. மலரைக் குறிக்கும் பூ என்னும் சொல்வேறு. அது பொல் என்னும் வேரினின்று திரிந்தது;பொலிதற் பொருளது. பொலிதல் விளங்குதல். பூ-வ. bhu. பதி-வதி-வசி-வ. வஸ்-E.was. இரிச்சார்டு மாரிசு (RichardMorris) தம் 'Historical Outlinesof English Accidence' என்னும் ஆங்கிலஇலக்கண வாராய்ச்சி நூலில், was என்னும் ஆங்கிலத்துணை வினைச்சொல்லை வஸ் (to dwell)என்னும் வடசொல்லினின்றே திரிப்பர் (ப.266). பிள்-பெள். பெட்டல் = விரும்புதல்.பிள்-விள்-விரு-விரும்-விரும்பு. விள்-வெள்-வெண்டு.வெண்டுதல் = விரும்புதல். வெள்-வேள்-வேண்டு.வேள்-வேண் = விருப்பம். வேட்டல் = விரும்புதல். விள் -will(விருப்பத் தீர்மானத்தைக் குறிக்கும் ஆங்கிலஎதிர்காலத் துணை வினைச்சொல்). மைந்து (வலிமை)-might.இயல்வைக் குறிக்கும் mayஎன்னும் ஆங்கிலத் துணை வினைச்சொல்லை mightஎன்பதனின்றே திரிப்பர். இயல்வு-possibility. can என்னும் ஆங்கிலத்துணை வினைச்சொல்லை, அறிதற் பொருள் கொண்ட conஎன்னும் வினைச்சொல்லினின்று திரிப்பர்இரிச்சார்டு மாரிசு (H.O.E.A.,பக்.268). காணுதல் = அறிதல். காட்சி = அறிவு. காண் - con-can.
|