சுல்லீ- வ. சுல்லி (c). சுல்-சுள். சுள்ளெனல் = எரிதல், சுடுதல்,காய்தல். சுள்-சுள்ளை = மட்கலஞ் சுடும் இடம்.சுள்ளை-சூளை. சுள்-சுர்-சுரம் = சுடும் பாலை நிலம் சுரம்-சுரன் = தீ வடிவான தேவன். வ. ஸு ர. அல் (அல்லாத)-அ. ஒ.நோ:நல்-ந. அசுரன் = சுரனல்லாதவன். ஒ.நோ: அவலம் = வலமின்மை, நோய், துன்பம், துயரம். பிராமணர் தம்மைச் சுரர் என்றதனால்,தாமல்லாத தமிழரும் திரவிடருமான பழங்குடி மக்களைஅசுரர் என்றனர். கொல்லேறடக்கல்,திரிபன்றியெய்தல், கனவில் நாணேற்றல், கடுமாக்கொல்லல் முதலிய அருமறவினை செய்து மணத்தல்,பழங்குடி மக்கட்கே உரியதும் இயல்வது மாதலின், அதுஅசுரமணம் எனப்ப ட்டது. வடநாட்டிலும் தென்னாட்டிலும் பலஅரசரும் அறிஞரும் பிராமணியத்தை எதிர்த்ததனால்,அசுரன் என்னுஞ் சொற்குக் கொடியவன் என்னும்பொருளை ஊட்டிவிட்டனர். தமிழப் பண்பாட்டழிவு பூஞ்சாற்றூர்ப் பார்ப்பானை ஆவூர்மூலங்கிழார் புகழ்ந்ததும் பிராமணரை வணங்குமாறுகாரிகிழார் வேண்டியதும், "ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து’’ | (புறம். 367) |
என்று ஒளவையார் பாடியதும், தமிழப்பண்பாட்டொடு முரணு வனவாகும். தமிழர் ஒற்றுமைக் குலைவு சோழன் குராப்பள்ளித் துஞ்சியபெருந்திருமாவளவனும், பாண்டியன்வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்,ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார், "ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் இருவீரும் உடனிலை திரியீ ராயின் இமிழ்திரைப் பௌவம் உடுத்தவிப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே அதனால், நல்ல போலவும் நயவ போலவும் | |
|