பக்கம் எண் :

தமிழர் வரலாறு-285

தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காதல் நெஞ்சின்நும் இடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்கநும் புணர்ச்சி" 

(புறம்.58)

என்று பாடியதனுள் மறைந்துகிடக்குங்குறிப்பைக் கூர்ந்து நோக்கிக் காண்க.மூவேந்தர்க்குள்ளும் ஓரளவு ஒற்றுமை யிருந்தகடைக்கழகக் காலம்வரை, அயலார் தமிழ்நாட்டைக்கைப்பற்ற முடியவில்லை. அதன் பின்னரே,ஒன்றன்பின் ஒன்றாகப் பல அயலாட்சிகள்தோன்றி, மூவேந்தரும் மறைந்தனர். அன்று மூவேந்தர்ஒற்றுமையைக் குலைத்த ஏதின்மாக்கள் கூட்டம்,இன்றும் தமிழரிடையிருந்து ஒற்றுமையைக் குலைத்துவருகின்றது.

நடுநிலை திறம்பல்

தானங்களெல்லாம் பிராமணர்க்கேசெய்யப்பட்டன.

"ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்" 

(புறம்.43)

என்று தாமப்பல் கண்ணனார் சோழன்நலங்கிள்ளி தம்பி மாவளத் தானை நோக்கிக்கூறியதனின்று பிராமணர்க்குத் தனிச் சலுகைகாட்டப்பட்டமை விளங்குதல் காண்க.

(3) மொழித்துறை

தமிழிழிபு

தமிழ் வழிபாட்டிற்கும் சடங்கிற்கும்தகாத மொழியென்று தள்ளப்பட்டது.

தமிழ் எழுத்து மறைப்பு

கல்வெட்டுகள் பிராமி எழுத்திலேயேவெட்டப்பட்டன.

சொற்பெயர்ப்பு

பிராமணர் தமிழகம் வந்து தமிழரையண்டித் தமிழாலேயே வாழினும், தமிழ்ச்சொற்களைவழக்கு வீழ்த்த வேண்டுமென்றே வேண்டாவடசொற்களைப் புகுத்தினர்.

எ-டு: 

தென்சொல்  வடசொல்

வேந்தன்  இந்திரன்

குமரிமலை  மகேந்திர பருவதம்

அறம்  தருமம்

சாலி  யவ (ஜவ-ஜாவ- சாவகம்)