சில இடப்பெயர்களைச் சற்றே திரித்துவடசொல்லாக்கினர். எ-டு: | தென்சொல் | வடசொல் | | குமரி | குமாரீ | | கன்னி | கன்யா | | மதுரை | மதுரா | | காஞ்சிபுரம் | காஞ்சீபுர | | வாரணன் | வருண |
வடசொல் வழக்கு ஆயிரக்கணக்கான தென்சொற்கள்இறந்துபட்டுள்ள இக்காலத்தும் அயன்மொழித்துணையின்றித் தமிழைத் தூய்மையாக எழுதலாம்.தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச் செய்யுட்குவடசொல் வேண்டியதே யில்லை. ஆயினும், வேதத்திலும்இதிகாச புராணங்களிலும் நூற்றுக்கணக்கானதென்சொற்க ளிருப்பதனாலும், அக் காலத்தில்வரலாற்றையும் மாந்தனூலையும் துணைக்கொண்டமொழியாராய்ச்சி யின்மையாலும்,வடமொழியிலுள்ள தென் சொற்களை யெல்லாம்வடசொல் என்றே கருதினதனாலும், வடமொழிதேவமொழியாத லால் ஒரு மொழியினின்றும் கடன்கொள்ளா தென்னும் தவறான கருத்துப்புகுத்தப்பட்டதனாலும், வடமொழி வெறியரானபிராமணர் ஒருசில வேண்டா வடசொற்களைத் தமிழிற்புதிதாகப் புகுத்தினத னாலும், "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" | (தொல்.884) | "சிதைந்தன வரினும் இயைந்தனவரையார்" | (தொல்.885) |
என்று தொல்காப்பியர் கூறிவிட்டார்.ஆயினும், கூடலூர்கிழார் வடக்கு கிழக்கு என்னும்அருமையான உலகவழக்குச் சொற்கள் இருக்கவும்அவற்றிற்குத் தலைமாறாக (பதிலாக), உதீசி பிராசிஎன்னும் வடசொற்களின் திரிபான ஊசி பாசிஎன்னும் சிதைவு களை, 229ஆம் புறப்பாட்டில்ஆண்டிருப்பது, அவரது பேதைமை யையே காட்டும். இலக்கியத் துறை வீட்டின்பம் அளிக்கும் இறைவனைச்சிவன் அல்லது திருமால் என்னும் பெயரில்வணங்கிவந்ததனால், தமிழரே அறம்பொரு ளின்பம்வீடென்னும் நாற்பொருளை வகுத்தவராவர்.சிறுதெய்வங்கட்குக் காவு கொடுத்து வேள்விவளர்க்கும் ஆரியர்க்கு, விண்ணுலகப் பேறேயன்றிவீடுபே றில்லை.
|