தொடர்புபடுத்துவர். ஆளுதற் பொருளில்,arkhoஅல்லது arkh-ein என்னும்கிரேக்கச் சொல்லையும், ராஜ் என்னும்சமற்கிருதச் சொல்லையும், regoஎன்னும் இலத்தீன் சொல்லையும், ஆளுதல் பிற்பட்டவழக்கென அறிக. அரசி = வ. ராஜ்ஞீ,L.regina. ராஜ்ஞீ என்னும் வடசொல்லேஇன்று ராணி என்று வழங்குகின்றது. அணைத்தல் = தழுவுதல், தழுவிக் காத்தல். ஒ.நோ: தழுவுதல் = அணைத்தல், அணைத்துக்காத்தல். "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்" | (குறள்.544) |
தழுவு - தழிஞ்சி = போரிற்படைக்கலங்களால் தாக்குண்டு சேதமுற்றபடையாளரைப் போற்றியுரைத்தும் பொருள்கொடுத்தும் அரசன் தழுவிக்கோடல். "அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ," | (தொல்.பொருள்.65) |
அரவணைத்தல் = அரசன் தழுவுதல்,அரசன்போல் தழுவிக் காத்தல். "ஐயன் புரியும் அரவணைப்பும்" | (பணவிடு.27) |
அரவணைத்துக் காக்க வேண்டும் என்னும்உலக வழக்கையும் நோக்குக. இதில், அரவு என்பதுஅரசனையன்றிப் பாம்பைக் குறிக்காது.பாம்பணைத்தல் என்பது புணர்ச்சியைக் குறிக்குமேயன்றிப் பாதுகாத்தலைக் குறிக்காது. அரவு - அரசு. ஒ.நோ: உரவு - உரசு. உரவு - உராவு - அராவு. கடைக்கழகக் காலத் தொழிற்குலங்கள் அகவர் (சூதர்), அங்காடிவணிகர்(நாளங்காடி வணிகர், அல்லங்காடி வணிகர்),அச்சுக்கட்டிகள், அடியோர், அண்டர் (இடையர்),அரசர் (கிழவர், வேளிர், மன்னர், கோக்கள்,வேந்தர்), அளவர், ஆட்டு வாணிகர், ஆயர் (கோவலர்,கோவர்), ஆறலைகள்வர், இராக்கடைப் பெண்டிர்(தெருப் பொதுமகளிர்), இயவர் (இசைக்கருவியாளர்),இலையமுதிடுவார் (இலை வாணியர்), உமணர், உழவர்(கடையர்), உறைகாரர், எயினர், எலிமயிர்நெசவர்,ஓசுநர் (மீகாமர்), ஓவர் (மாகதர்), கடம்பர்,கடிகையர் (நாழிகைக் கணக்கர்), கண்ணுளர்,கண்ணுளாளர் (சித்திரகாரர்), கணிகையர் (நாடகக்கணிகையர், கோவிற் கணிகையர்), கணியர், காலக்கணிதர், கம்மியர் (கம்மாளர்), களமர்(கருங்களமர், வெண்களமர்), கன்னார் (செப்புக்
|