பக்கம் எண் :

தமிழர் வரலாறு-293

சமற்கிருதச் சொற்களும் சொலவங்கள் போன்றேகிரந்த எழுத்தில் வெட்டப்பட்டன. கல்வெட்டுச்சிலாசாசனம் என்றும், செப்பு வெட்டுத் தாமிரசாசனம் என்றும் பெயர் பெற்றன.

மதத்துறையிற் போன்றே மற்றத்துறைகளிலும் மூவேந்தரும் பிராமணர்க்கு எடுப்பார்கைப்பிள்ளைக ளாயினர். தமிழ் சமற்கிருதவார்ப்பகத்தில் வார்க்கப்பட்டது. வடசொல்மிகுந்து, கொச்சை வழக்கும் இலக்கண வழுக்களும்புகுந்து, தமிழ்ப் புலவர் கைகடந்து, பகைவர்ஆட்சிக்குட்பட்டுவிட்டது. அரைகுறையா யிருந்ததும்,நாயக்கர் ஆட்சியிலும் தஞ்சை மராட்டியமன்னராட்சியிலும் நிரம்பிவிட்டது. தஞ்சைச்சரபோசி மன்னர், தம் 'சரசுவதி மகால்' என்னும்கலைக்கூடத்தில் தொகுத்துள்ள 22,000-ற்கு மேற்பட்டபொத்தகங்களுள் பெரும்பாலன சமற்கிருதமே.

அரசன் என்னும் சொல்வரலாறு

உரம் = வலிமை. உரம் - உரவு = வலிமை.

"உரவுச் சினந் திருகிய" 

(புறம்.25:3)

உரவு-உரவோன்=வலியோன்.

"ஒருதா மாகிய வுரவோ ரும்பல்" 

(புறம்.18:3)

உரவு - உரவன் - அரவன் - அரசன் =வலியோன், தலைவன்

ஆள்வோன்.

வ- ச: போலித் திரிபு. ஒ.நோ: ஏவு-ஏசு,பரவு-பரசு, விரவு- விரசு.

அரசன் - அரைசன் - அரையன்-அரையம்.

அரசன் - . ராஜன், ராஜா - .ராஜ், தெ. ராஜு.

அரையன் - அரையர் - ராயர் - க.ராயரு, தெ.ராயலு.

அரையன் - ராயன்- வங்.ராய்.

அரவன் - (ராவன்) - மராட். ராவ்.

அரசன் - அரசு, அரைசன் - அரைசு.

அரசன் - Gk. archon = ruler, king.

L. rex, regis, Olr. reg.

E. rich, OE. rice, OFris. rike, Mod. Fris. ryk, rik-rijck, MDu. rijke, rijck, Du. rijk, OS. riki, MLG. rike, LG. rik, OHG. richi, riche, G. reich, ON. rikr, Norw. and Sw. rik, Da. rig, Celt. rix, F. riche, Sp. rico, It. ricco.'

அரையன் - ராயன் - ராய் - OF.roy, F. roi, ONF. rei, E.ray, roy

மேலை யாரிய மொழிகளில் இச்சொற்கட்கு மூலமில்லை. சமற்கிருதத்தில் ராஜன்என்னும் சொற்கு 'ரஜ்' (ஒளிர், to shine)என்பதை மூலமாகக் காட்டி, 'ரங்' (நிறம்) என்னுஞ்சொல்லொடு