விட்டேம்" என்று ஒரு வானுரையெழுந்தது! 'சூத்திர' வேந்தன் நிலத்தேவரை ஒன்றும்செய்ய இயலவில்லை. இராசராசன் மகனான முதலாம்இராசேந்திரனும் (கி. பி.1014-42) தஞ்சைப் பெரியகோவிலிற் பூசைசெய்து வந்த தன் குருவாகிய சர்வசிவ பண்டிதருக்கும், ஆரிய நாட்டிலும் மத்தியநாட்டிலும் கௌட (வங்க) நாட்டிலுமிருந்த அவர்மாணவருக்கும், ஆண்டு தோறும் ஈராயிரங் கலம் நெல்குரவ நுகர்ச்சியாகக் (ஆசாரிய போகமாகக்)கொடுக்குமாறு கட்டளை பிறப்பித்தான். கி.பி.1034-ல், எண்ணாயிரம் என்னும்இடத்தில், 300 பிராமண மாணவரும் 10 பிராமணஆசிரியரும் கொண்ட ஓர் இலவச மறைநூல் விடுதிக்கல்லூரி கட்டித் தானஞ் செய்தான். வீரராசேந்திரச் சோழன் (கி.பி.1062-67) திருமுக்கூடல் என்னு மிடத்தில், பிராமணமாணவர்க்கு வேதமும் பிறநூற் கலைகளும்கற்பிக்குமாறு, மருத்துவசாலையொடு கூடிய ஓர் இலவசவிடுதிக் கல்லூரியைக் கட்டிக் கொடுத்தான். மூன்றாங் குலோத்துங்கன் (கி.பி.1178-1218) திருவொற்றியூரிற் பிராமண மாணவர்க்குப் பாணினீயம்கற்பிக்குமாறு, வியாகரண தான வியாக்கியானமண்டபம் ஒன்று அமைத்து, அதற்கு 60 வேலி நிலங்கொண்ட குலோத்துங்கன் காவனூர் என்ற ஊரைஇறையிலி யாக்கினான். அவன் குருவும் இலாட நாட்டுப்பிராமணரே. பல கோவில்களில் துலாபார மண்டபம்என்றே ஒன்று கட்டப் பட்டிருந்தது. துலாபாரம் என்றுஒரு வரியும் குடிகளிடம் வாங்கப்பட்டது. சோழர்போன்றே பாண்டியரும் ஒழுகினர். சேரரைப்பற்றிச்சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம் குடிகள்பொதுப்பணம், தமிழும் தமிழனும் தளரவும்,பிராமணனும் பிராமணியமும் வளர்ந்தோங்கவும்வாரியிறைக்கப்பட்டது. கடுங்கோன், காய்சினவழுதி,இளஞ்சேட்சென்னி, நெடுங் கிள்ளி, மாவலி,உதியஞ்சேரலாதன் என்றிருந்த அரசர்தனித்தமிழ்ப் பெயர்களெல்லாம் ஜடில பராந்தகன்,விஜயாலயன், பாஸ்கர வர்மன் என வடசொற்பெயர்களாக மாறின. பாண்டியர் பெயருக்கு முன் மாறவர்மன்ஜடாவர்மன் என்பனவும், சோழர் பெயருக்கு முன்ராஜகேசரி பரகேசரி என்பனவும் அடைமொழிகளாகச்சேர்க்கப்பட்டன. அரசர் மெய்க்கீர்த்திகள் ஸ்வஸ்திஸ்ரீ என்று தொடங்கின. இடையிடை சமற்கிருதச்சொற்கள் கலந்தன. முன்னும் பின்னும் சமற்கிருதச்சொலவங்களும் (சுலோகங்களும்) அமைந்தன.
|