(1) நானிலத் தொழில் மருதம் - உழவர், முல்லை - ஆயர்,குறிஞ்சி - வேட்டுவர், நெய்தல் - மீன் பிடியர்(நுளையர்). முதன்முதல் தோன்றிய குலங்கள் இந்நால்வகைத் தொழில் வகுப்புகளே. இந் நான்கும்உணவுபற்றியனவே. (2) ஐந்தாம் (நிலையில்லா)நிலத்தொழில்-கவர்வு முல்லையும் சிறுமலைக் குறிஞ்சியும்முதுவேனிற் காலத்தில் வற்றி வறண்டதனால்,அங்குள்ள வேட்டுவர் ஆறலைப்போரும் சூறைகொள்வோருமாக மாறி அம்பெய்வதால் எய்நர்(எயினர்) என்றும், மறமிகையால் மறவர் என்றும்பெயர் பெற்றனர். (3) மருதநிலத் தொழில் நான்கு மருதநில மக்கள்தொகை பெருகிய பின்,பண்டமாற்றிற்கு வணிகரும், வழக்குத்தீர்ப்பிற்கும் காவற்கும் ஊர்க்கிழவரும்(தலைவரும்), நோய் நீக்கவும் மழை பெய்விக்கவும்தெய்வத்தை வேண்ட உவச்சனும் (பூசாரியும்),உழவரினின்று பிரிந்தனர். ஊர்க் கிழவரே அரசர்குலத்தொடக்கம். ஆட்சிப் பரப்பு விரிய விரிய,வேளிரும் மன்னரும் கோக்களும் வேந்தரும் முறையேதோன்றினர். முதற்காலத்தில், நானிலத்திற்கும்பொதுவான பண்டமாற்று மருதநிலத்திலேயேநிகழ்ந்தது. பின்னர் நீர்வாணிகம்தோன்றியபின் நெய்தல் நிலத்திலும் நிகழ்ந்தது. மருதநிலத்திற் போன்றே ஏனைநிலங்களிலும் குடியிருப்புத் தலைவரும் தேவராளரும்(பூசாரிகளும்) தோன்றினர். உவச்சர் வகுப்பினின்றே, நாளடைவில்புலவரும் ஆசிரியரும் துறவியரும் முனிவரும்முதன்முதலாகத் தோன்றினர். கல்வி, உலகியலும்மதவியலும் என இரண்டாகப் பிரிந்தது. (4) மருதநிலப் பேரூர்ப் பதினெண்கைத்தொழில்கள் மருதநிலப் பேரூர்களில், உழவிற்குப்பக்கத் துணையாகப் பதினெண் கைத்தொழில்கள்படிப்படியாகத் தோன்றின. பிறநிலக்குடியிருப்புகளிலும், அவ்வந் நிலத்திற் கேற்றவாறுசில கைத் தொழில்கள் தோன்றின. (5) பற்பல கைத்தொழில்கள் திணைமயக்கம் ஏற்பட்டபின், நானிலமக்களும் மருதநில நகரங்களிலும் நெய்தல்நிலப்பட்டினங்களிலும் அமர்ந்து, பல்வேறு
|