பக்கம் எண் :

துளு105

திரவிடத்தாய்

(கழுதை), குதுரெ (குதிரை), குரு (குருளை), குறி (கொறி), நறி, நாய், பில்லி (புலி), மறி, மான், கஞ்சி (கன்று).
 
6. பறவைப் பெயர்
 
கொர்ங்கு (கொக்கு), கோரி (கோழி), பாவலி (வாவல்), காடெ (காடை).
 
7. ஊர்வனவற்றின் பெயர்
 
உடு (உடும்பு), எலி, ஒந்தி, சுண்டெலி, தேள், பாவு (பாம்பு).
 
8. மரஞ்செடிப் பெயர்
 
அடும்பு (அடம்பு), அர்த்தி (அத்தி), ஆம்பல், எண்மெ (எள்), கரும்பு , கொடி, ஜோள் (சோளம்), பாஜெ (பாசி), மஞ்சள், மர (மரம்), பாகெ (வாகை), வாரெ (வாழை), பேவு (வேம்பு).
 
9. தட்டுமுட்டுப் பெயர்
 
அடப்ப (அடைப்பம்), கர (கலம்), குப்பி, கூடெ (கூடை), சட்டி, ஜாடி (சாடி), செம்பு, ஜோனிகெ (சோளிகை), தாட்டி, தொட்டில், மேஜி (மேசை).
 
10. உணவுப் பெயர்
 
அப்ப (அப்பம்), அரி (அரிசி), உப்பு, ஊட்ட (ஊட்டம்), எண்ணெ (எண்ணெய்), கஞ்சி, கலி (கள்), கூளு (கூழ்), சாரு (சாறு), தீனி, நஞ்சு, புண்டி (பிண்டி), மர்து (மருந்து).
 
11. ஆடையணிப் பெயர்
 
கொப்பு, பாசி, வக்கி (வங்கி), சல்லண (சல்லடம்).
 
12. ஊர்திப் பெயர்
 
அம்பாரி, உஜ்ஜாலு (ஊஞ்சல்), ஓட (ஓடம்), கப்பல், தேரு (தேர்), தோணி.
 
13. கருவிப் பெயர்
 
அம்பு, அர (அரம்), இக்குளி (இடுக்கி), உளி, கத்தி, கம்பி, கவணெ (கவணை), கொக்கெ (கொக்கி), கோலு (கோல்),