வடமொழிச் சென்ற தென்சொற்கள் | 3 |
அரசுகட
அரசுகட்கெல்லாம்
முந்திய கிரேக்க சரித்திரம் கி.மு. 3000ஆம் ஆண்டி னின்று தொடங்குகின்றது. ஆகவே, சமற்கிருத
ஆரியர் வட இந்தியாவிற் குடியேறினதும் அதே காலமாய்த்தா னிருக்கவேண்டும்.
உலகில் முதன்முதல்
உண்டானது தமிழ். தமிழர் (கி.மு. 8000) குமரிநாட்டினின்றும் வடக்கே போய்ச் சின்ன
ஆசியாவில் குடியேறினர் என்பது பாபிலோனியக் குகை வெட்டாலும் குழி வெட்டாலும் தெரிய
வருகின்றது. அங்கேதான் தமிழ் சேமியக்
(Semitic)
கிளையாகத் திரிந்தது. எபிரேயம்
(Hebrew),
அரபி
(Arabic)
முதலியன சேமியக் கிளை மொழிகள். அவற்றையடுத்து
Latin,
Greek முதலிய ஆரியக்
கிளை மொழிகள் பிறந்தன. ஒரு தாய்மொழியினின்றும் ஒரு கிளைமொழி உண்டாயிருப்பின் அதன்
இன்றியமையாத முதற் சொற்களெல்லாம் தாய்மொழியா யிருக்கும். ஏனையவெல்லாம் அதற்குச்
சொந்தமான ஆக்கச் சொற்களே. அவற்றுள் ஒரு பகுதி பிறமொழிகளினின்றும் கடன்கொண்ட
திசைச்சொற்களா யிருக்கும். ஒரு மொழியின் ஆக்கச்சொற் பெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும்
காரணம் அம் மொழியை வழங்கும் மக்களறிவே யாகும்.
ஆரியக்
கிளைகளில் ஒன்றாகிய
Teutonic
என்பது
Greko-Latin என்ற
பெருங்கிளையினின்றும் கிளைத்தபொழுதே (அதாவது சமற்கிருத ஆரியர் இந்தியாவுக்கு வருமுன்னமே)
அதில் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் கலந்திருந்தன. ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து தமிழ
ரோடு (கி.மு. 2500) கலந்தபின் எண்ணிறந்த தென்சொற்கள் வடமொழியிற் கலந்தன. ஆரியர்
வருமுன்னும் வந்தபொழுதும் வடஇந்தியாவில் வழங்கிவந்தவை யெல்லாம் கொடுந்தமிழ் மொழிகளே.
ஆரிய வருகைக்கு
முன் சமற்கிருதத்தில் அல்லது
Teutonic
மொழிகளிற் கலந்திருந்த தென்சொற்களிற் சில:
|
Tamil |
English |
Sanskrit |
|
அரத்தம்,இரத்தம் |
red |
ரக்தம் |
|
அரசன் |
Rajah |
ராஜா |
|
அகம் |
Gk. eikos, house
|
ஆசயம் |
|
ஆன்மா |
animos |
ஆத்மா |
|
இலக்கம் |
lakh |
லக்ஷம்
|
|
உதகம் |
water |
உதகம் |
|
எட்டு |
eight |
அஷ்டம் |
|
கோடி |
crore |
கோட்டி |
|
சக்கரம் |
circle |
சக்கரம் |
|
சக்கரை |
saccharine
|
சர்க்கரை |
|
சின்னம் |
signum |
சின்னம் |
|
தரை |
terra |
தரா |
|
தரு |
tree |
தரு |
|
|
|