என்னும்
ஐம்பொருள்களிலே வடமொழியாளர் தொடங்கிவிட, அவராலும் மொழி நூலறிவும் தாய்மொழிப்
பற்றும் அற்ற தமிழராலும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. 'ஸ்ரீ' என்பதிலுள்ள சகரம் தமிழ்ச்
சகரத்தை யொத்த ஒலியினதா யிருப்பது கவனிக்கத்தக்கது.
திருவென்னுஞ்
சொல்லுக்கு மேற்கூறப்பட்டுள்ள பொருள்களுள் செல்வம், அழகு, தூய்மை யென்னு மூன்றே முக்கியமும்
பிறவற்றுக்கு அடிப்படையுமாகும். அம் மூன்றனுள்ளும், செல்வம் என்பதே முதலதாகும்.
செல்வத்தினால் ஒருவர் சிறக்கவுண்டு இன்பமாய் வாழ்வதால் உடல் மொழுமொழுவென அழகு
பெறுகின்றது; வறுமையினால் வயிறு காய்ந்து மனங்கவன்று வெயிலில் வாடி மேனி கெடுகின்றது.
இதனாலேயே, செல்வமுள்ள இனத்தாரை வெள்ளொக்க லென்றும் வறுமையுற்ற இனத் தாரைக் காரொக்க
லென்றுங் கூறினர் நம் முன்னோர். செல்வ மிகுதியினால் ஒருவர்க்குப் பெருமையும்
தெய்வத்தன்மையும் உண்டாகின்றது; உலகிற் செல்வமிக்க அரசன் தெய்வத் தன்மையுடையவனாகக்
கருதப்படுகின்றான். கடவுள் உலகெலாமுடைய செல்வர். அளவிறந்த மதிப்பே தெய்வ வணக்கமாகும்.
மதிப்புச் செல்வத்தால் வருவது. அறிவும் ஒருவகைச் செல்வமே. தெய்வத்தன்மையுள்ள விடமெல்லாம்
தூய்மை கருதப்படும்.
ஆழ்ந்து
நோக்கின், திருவென்னுஞ் சொல்லுக்குரிய பொருள் களெல்லாம் மேற்கூறிய மூன்றனுள் அடங்கும்;
நோக்கிக் காண்க.
திருவென்னுஞ்
சொல் இப்போதுள்ளபடி முதன்முதலாகத் தொல் காப்பியத்தில்,
"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையறக் கிளந்த ஒப்பினது வகையே" (தொல். மெய்ப். 25)
என்னும் நூற்பாவில்,
செல்வம் என்னும் பொருளிலேயே வழங்கப் பட்டுள்ளது. பின்னர்த் திருக்குறளில்,
"அழுக்கா
றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்", (குறள். 168)
"அறனறிந்து
வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு", (குறள். 179)
"ஊருணி
நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு", (குறள். 215)
"இருவே றுலகத்
தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு", (குறள். 374)