1. கிறித்துவுக்கு
முற்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்நூல்களுள், தொல்காப்பியம் தவிர மற்றவையெல்லாம் அழிந்து
போயினமையின், அவற்றிலுள்ள அருஞ்சொற்களும் மறைந்துபோயின.
2. பண்டைத் தமிழ்நாட்டின்
பெரும்பகுதியைக் கடல் கொண்டமை யின், அப் பகுதியில் வழங்கின எண்ணிறந்த திசைச்சொற்கள்
அறவே மறைந்தன.
3. தமிழர் தம்
அறியாமைபற்றி அருமையான தென்சொற்கட்குப் பதிலாக, வடசொற்களை வழங்கினதினாலும்,பண்டைக்
காலத்தில் விரிவான தமிழகராதிகள் எழுதப்படாமையாலும், வழக்கற்ற தமிழ்ச்சொற்களெல்லாம்
மறைந்தொழிந்தன.
4. தமிழ், மனித
சமூகத்தின் இளமையில் தோன்றிய மிகப் பழைமை யான மொழியாதலின், இக்காலத்திற்குரிய சில
கருத்துகள் அக்காலத் தமிழர்க்குத் தோன்றவில்லை. அதனால் அவற்றுக்குச் சொல்லுந் தோன்றவில்லை.
5. சென்ற 2000
ஆண்டுகளாகத் தமிழ் ஆரியவயப்பட்டுள்ளமை யின், புதுச்சொற்கள் புனைந்து தனித்தமிழ் வளர்க்கப்படவில்லை.
ஆகையால், தமிழைப்
பிற புன்மொழிகள்போற் கருதி இழித்துக் கூறுவது தகாது.
ஒரு பொருளை ஆராயும்போது,
விருப்பு வெறுப்பின்றி நடுவு நிலையாய் ஆராய்தல் வேண்டும்.