|
பள்ளியெழுச்சி பாடினார் என்று
சொல்லலாம். "நீராருங் கடலுடுத்த"
என்னும் பாட்டு அது. "ஆரியம் போல் உலகவழக்
கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்"
என்பதுதான் அவர் பாடிய அப் பாட்டில் ஓர் உயிர்
நாடித் தொடர். அந்த அடியைத்தான் இப்பொழுது
ஒழித்து விட்டார்களே, அக் கருத்து ஒரு
சாரார்க்குப் பிடிக்கவில்லை என்று! ஆகையினால்
அந்தப் பாட்டைப் பாடாமலே விட்டுவிடுவது நல்லது.
அதை எழுதிய ஆசிரியரவர்கள் இந்தக் காலத்திலே
இருந்தி ருப்பாரானால் அந்த நிலைக்கு மிக மிக
வருந்தியிருப்பார். ஒரு வேளை அதன் பொருட்டு அவர்
உண்ணா நோன்புகூட இருந்தாலும் இருந்தி ருப்பார்.
இப்படி அந்தப் பாட்டின் கருத்து மறைக்கப்
பட்டிருக்கின்றது.
இக்கால், "அமுதசுரபி" என்னும் ஓர்
இதழில் "அகிலம் முழு வதும் அந்தணர் மயம்"
என்று ஒரு கட்டுரை வந்ததாம். அக் கட்டுரையில்
அந்தணர் என்ற ஒரு சொல்லைச் சேர்த்துக்
கொண்டதே தவறு. அந்தணர் என்னுஞ் சொல்
ஆரியர்களைக் குறிக்குஞ்சொல் அன்று. ஆனால் அதை
ஆரியர்களைக் குறிப்பதாகத் தவறாகக் கருதிக்
கொண்டு எழுதியுள்ளார் அதன் ஆசிரியர் கிருஷ்ண
ஸ்ரீநிவாஸ் என்பவர். கிருஷ்ணம் என்ற
சொல்லுக்கு மூலம் "க்ருஷ்" என்பது; அதற்குக் "கருப்பு"
என்பது பொருள். "க்ருஷ்ணபக்ஷம் (கரும்பக்கம்) க்ருஷ்ணஸர்ப்பம்
(கரும்பாம்பு) என்று வரும். க்ருஷ்ணன் என்றால்
மாயோன். மாயோன் - கரியவன் என்பதையே மொழி
பெயர்த்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை
வடநாட்டுக் கண்ணன் என்பானும் கரியவனாக
இருந்திருக்கலாம். ஆனால் அவன் தமிழன் என்பதை
நீங்கள் மறந்துவிடக் கூடாது. தென்மதுரை
முழுகிப்போனபின் தென் னாட்டிலிருந்து போன தமிழ்
மக்கள்தான் அங்குப்போய் மதுராபுரி என்று
அங்குள்ள ஓர் ஊருக்குப் பெயரை வைத்துக்
கொண்டார்கள். எப்படி ஆங்கிலேயர்கள்
அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும்
போய், தங்களின் பழைய நாட்டை நினைவு
கூர்வதற்காக "இங்கிலாந்து" என்றால் "நியூ
இங்கிலாந்து" என்றும் "யார்க்கு" என்றால் "நியூயார்க்கு"
என்றும் பெயர்களை வைத்துக்கொண்டார்களோ, அதே
போல் தென்னாட்டிலிருந்து போன நம்மவர்களும் வட
நாட்டுக்குப் போய் "மதுரை" என்றே பெயர்
வைத்தார்கள். இப்பொழுது அது "மத்ரா" என்று
வழங்கி வருகின்றது. அங்கேதான் கண்ணன் இருந்தான்.
அவன் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் தூய
தமிழன். அங்குள்ள வழக்கத்தையெல்லாம்
பார்த்தீர்களானால், கண்ணன் அக்கால் தென்
னாட்டில் உள்ள வழக்கப்படியே நப்பின்னையை ஏறு
தழுவி மணந் தான் என்று இருக்கின்றது. இவ் வழக்கம்
நம் நாட்டின் முல்லை நிலத்தின் விழாவை
யொட்டியது. ஒவ்வோர் ஆயர் குடும்பத்திலும் ஒரு
சேங்கன்று பிறந்தவுடன் அதற்கு அக் குடும்பத்தில்
உள்ள பெண்ணின் பெயரை வைத்து அதை வளர்த்து
வருவார்கள். அந்தப் பெண்ணுடன் அந்தக் கன்றும்
நன்கு வளர்ந்து காளையாகும். அந்தக் காளையை எவன்
|