பக்கம் எண் :

56பாவாணர் உரைகள்

பிடித்து அடக்குகின்றானோ அவனே அந்தப் பெண்ணை மணப்பதற் குரியவன் என்று தீர்மானிப்பார்கள். இதெல்லாம் அக் காலத்தில் இருந்த ஒரு வழக்கம். அந்த முறைப்படி அந்தக் கண்ணனும் மணந்தான்.

இப்பொழுது, க்ருஷ்ண என்றால் கருப்பன் என்றுதான் பொருள். நீங்கள் அகர முதலியை எடுத்துப் பாருங்கள். அதிலே "கருள்" என்ற தூயதமிழ்ச் சொல் இருக்கும். கருள் - என்றால் கருப்பு. இந்தக் "கருள்" என்னுஞ் சொல்தான் வடமொழியில் "க்ருஷ்" என்று திரியும். "சுள்" என்று ஒரு சொல் உண்டு. "சுள்" என்று வெயிலடிக்கின்றது என்று நாம் சொல்வதில்லையா? சுள் என்றால் சுடுதல் என்னும் பொருள் குறிக்கும் ஒரு சொல் மூலம். காய்கிறது, சுடுகிறது என்பதை யெல்லாம் இந்த "சுள்" என்னும் சொல் உணர்த்தும். காய்ந்துபோன குச்சியைச் "சுள்ளி" என்று சொல்கிறோம். சுள் என்னும் மூலத்தி லிருந்துதான் "சுரம்" என்று வெப்பத்தைக் குறிக்கும் சொல் பிறக்கும். அதை வடமொழியில் "சுஷ்" என்று வைத்திருக்கிறார்கள். சுக்கு இருக்கின்றதே காய்ந்து போன இஞ்சி, அது காய்ந்து போனதால்தான் சுள்+கு சுக்கு என்று சொல்கிறோம். இந்தச் சுக்கைச் சமசுக்கிருதத்தில் "சுஷ்க" என்று சொல்கிறார்கள். நம் "சுள்"ளை அவர்கள் "சுஷ்" என்று மாற்றி அதை அவர்களுடைய சொல் என்று வேறு சொல்கின்றார்கள். இன்னும் என்ன சொல்கிறார்கள், "சுஷ்க" என்பதைத்தான் நாம் "சுக்கு" என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்கின்றார்கள், ஏன் தெரியுமா? தமிழன் திறந்த வாயன்.

அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போல் ஒன்று என்று எண்ணாதீர்கள். இதுபோல் எத்தனையோ எழுதிக் கொண்டு வருகின்றார்கள். அவற்றை யெல்லாம் இங்கு எடுத்துச் சொல்லி விட முடியாது. ஆனால் தமிழர்களில் எவரும் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை; யாரும் கேட்பதும் இல்லை. அதனால் "பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே" என்றாகி வருகின்றது. இதையெல்லாம் ஏன் சொல் கின்றேன் என்றால், இப்படி "அகிலம் முழுவதும் அந்தணர் மயம்" என்று சொல்கிறவர்தம் பெயரே எப்படி அமைந்திருக்கின்றது என்பதைத் தெரியாமல் இருக்கிறார். தூய சமசுக்கிருதச் சொல் என்று அவர் கருதிக் கொண்டிருக்கும் அவர் பெயரே தூய தமிழ் மூலத்தைக் கொண்டிருக்கின்றது. அதே போல் ஸ்ரீ என்பது "திரு" என்பதன் திரிபு. திரு என்பதற்குத் திரண்டது என்பது பொருள். திரட்சி - திரண்டது. திரண்டது என்பது முதன் முதலில் செல்வத்தைக் குறித்தது. திருவரங்கம் என்று வழங்கியதைத்தான் இப்பொழுது ஸ்ரீரங்கம் என்று மாற்றி வைத்திருக்கின்றார்கள். அடுத்து "நிவாஸ்" என்பதையும் பார்த்தீர்களானால், அதில் உள்ள "நி" என்பது ஒரு முன்னொட்டு (அஃதாவது Prefix என்கிற உபசர்க்கம்). "வாஸ்" என்பது வஸ் என்பதி னின்று வந்தது. வஸ்-to dwell. "வஸ்" என்பது "வதி" என்னும் தமிழ் மூலத்தின் திரிபு. வதிதல் என்றால் தங்குதல் அல்லது வாழ்தல். இனி, இந்த "வதி" என்னும்