பக்கம் எண் :

தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு57

மூலத்தினின்று வேறு பல சொற்களை எடுத்து உருவாக்கிக் கொண்டார் கள். அவற்றிற்கும் மூலம் தமிழிலேயே உண்டு. எனவே இஃது ஒன்றைக் கொண்டே நம் கருத்தை நாட்ட வேண்டும் என்பதில்லை. எத்த னையோ ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்கின்றன. நான் இவற்றைக் கண்டு கொள்ள ஓராண்டு ஈராண்டு அன்று ஐம்பது ஆண்டுகள் ஆராய்ச்சியில் மூழ்கினேன். இவற்றுக்கு வேண்டிய சான்றுகளை யெல்லாம் எல்லா நூல்களையும் படித்துத் தேடி எடுத்தேன்.

ஓர் உண்மையை நிலைநாட்டுவதற்கு நான்கு வழிகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை நால்வகை அளவைகள் (பிரமாணங்கள்) எனப்படும். அவை காட்சி, கருத்து, ஒப்பு, உரை என்பவை. அவற்றைத்தான் அவர்கள் சமசுக்கிருதத்திலே பிரத்தியட்சம், அநுமானம், உபமானம், ஆகமம் என்று பகுத்து வைத்திருக்கின்றார்கள். இப்பொழுது நமக்குக் காட்சி சான்று இல்லை. சிலர் கேட்கிறார்கள், தமிழ்நாடு குமரிநாடு என்பதற்கும் தமிழன் குமரி நாட்டான் என்பதற்கும் நமக்குக் காட்சி சான்று அஃதாவது பழம் பொருட்கலை Archaeological evidence நமக்கில்லையே என்று. அப்படி ஏன் இல்லை என்றால், நம்முடைய பழைய நிலமெல்லாம் கடலுள் முழுகிப் போய் விட்டது. காவிரிப்பூம்பட்டினம் எப்படி மூழ்கிப் போய் விட்டதோ அப்படியே தெற்கே யிருந்த அந்தக் குமரி நாடு, பழந்தமிழ் நாடெல்லாம் முழுகிப் போய் விட்டது. தெற்கே ஒரு பெரிய நிலம், அஃதாவது பனிமலை என்கின்ற இமயமலை எவ்வளவு தொலைவில் உள்ளதோ அவ்வளவு தொலைவில் குமரிமலை என்று ஒரு பெரியமலை தென்கோடியில் இருந்தது. அந்த இடத்தில்தான் நம் முன்னோர்கள் தோன்றினார்கள். அதனால்தான் அந்தக் காலத்திலேயே பாண்டியன் சிதம்பரம் என்று சொல்லப்பெறும் தில்லையை நடுவிடமாக வைத்துக் கணக்கிட்டான். நெஞ்சாங்குலையின் துடிப்புப் போன்றது இறைவனு டைய ஆற்றல். அந்த இறைவனுடைய தொழிலைத்தான் மூன்றாகவோ ஐந்தாகவோ சொல்லி, அதை நடம் என்று உருவகித்துச் சொல்கிறது. வடக்கே போனாலும் ஓர் ஈராயிரத்து ஐநூறு கல். தெற்கே போனாலும் ஓர் ஈராயிரத்து ஐநூறு கல். நடு இடம் அந்தத் தில்லை. பாண்டியனே அந்த இடத்தை அப்பொழுதே அமர்த்திவிட்டான். இந்தச் சிவனடியார்களுக்கெல்லாம் சிறந்ததான உருத்திராட்சம் (உருத்திரா - அட்சம் சிவனுடைய கண்மணி.) தொன்று தொட்டு விளைவது நேபாள நாட்டிலேதான். முதலில் மதுரையை நான் சொன்னேன். அதற்கு முன் தமிழர்கள் வங்கத்திலே தங்கி அங்கு ஒரு காளி கோயிலை உண்டாக்கினார்கள். அதனால்தான் அதற்குக் காளிக் கோட்டம் (Calcutta) என்று பெயர். இன்றைக்கும் வடமொழியிலே காளிக்கட் என்று தான் சொல்வார்கள். ஆங்கிலத்தில்தான் கல்கத்தா என்று சொல்வார்கள். அதனால் வடநாட்டில் உள்ளதெல்லாம் ஆரியருடையது என்று தவறாக