பக்கம் எண் :

58பாவாணர் உரைகள்

நாம் கருதிக்கொள்ளக் கூடாது. வடநாட்டிலே ஒரு காலத்திலே தமிழர்களாகவே இருந்தவர்கள் பின்னர் திரவிடர்களாக மாறினார்கள். நம் மனோன்மணியம் சுந்தரனாருக்குப் பின்னாலே பிராமணத் தொண்டர் ஒருவரே தோன்றினார் இந்தத் தமிழைக் காப்பதற்கு. அவர்தாம் பரிதிமாற் கலைஞர் என்னும் சூரியநாராயண சாத்திரியார். அவர் வரலாற்றை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அவருடன் நெருங்கிப் பழகியவர்களைக் கேட்டால் தாம் பல உண்மைகளெல்லாம் விளங்கும். சிறந்த தமிழ்ப்பற்றுள்ள உண்மையான தொண்டர். சிறந்த பண்பாடுள்ளவர். கிறித்துவக் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராகவிருந்த பொழுது, பிராமண மாணவர்களை வைத்துக் கொண்டு சொல்லியி ருக்கின்றார், "பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டார்" என்று. எவ் வளவு துணிச்சலும் நெஞ்சுரமும் கள்ளங்கவடற்ற தன்மையுமிருந்தால் அவர் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும் என்று கருதிப் பாருங்கள். அவர் தம் இறுதிக் காலத்தில் இருமல் நோயால் பேரிடரும் பெருந்துன்ப மும் பட்டார். அப்பொழுதும் அவர் அன்பளிப்பாகவோ கட்டணமா கவோ காசு பணம் ஒன்றும் வாங்காமல் மாணவர்களுக்கு இலவயமாகத் தமிழைப் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார் அடிக்கடி அவருக்கு இருமல் வருமாம். இவரோ இருமிக்கொண்டே பாடம் சொல்வாராம், "இருமல் என்னோடு பெருமல் செய்கிறதே" என்று.

நம் நாட்டிலே, பழைய காலத்திலே, இந்தியா முழுவதும் பெருவாரி யாகப் பரவியிருந்தது, இக்கால் தென்னாட்டிலே சிறந்த சமயமாக விருக்கின்ற சிவநெறிதான். அந்த சிவ சமயத்திலே, பரிதிமாற் கலை ஞர்க்குப் பிறகு தமிழில் சிறந்த புலவராகவும் ஆங்கிலத்திலே சிறந்த அறிஞராகவும் சிறந்த சிவநெறியாளராகவும் பண்பு மிக்கவராகவும் விளங்கிய பேரறிஞர் ஒருவர் தோன்றினார். அவர்தாம் தனித்தமிழ் உண்மையை நமக்கு விளக்கமாக அறிவித்தார். அவரே மறைமலை யடிகள். அவர்களுக்குப் பின்னாலே நான் இந்தத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்து வருகின்றேன். இந்தப் பணிக்குக் கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த ஒருவனாகிய என்னை ஏன் இறைவன் தோற்றி னான் என்றால், அந்த உண்மையை நீங்கள் அறிதல் வேண்டும். மேனாட்டாருக்கு நம் குமரிநாட்டு வரலாற்றை அறிவதற்கு ஒரு பெருந்தடையாக விருப்பது இந்த (பைபிளில் சொல்லப்பெற்ற) ஏதேன் தோட்டக் கதை. ஏற்கனவே அந்த மதப்பற்றில்லாதவர்கள் கூட இனப்பற்று ஒன்றின் கரணியமாக நம்மைத் தாழ்வாகக் கருதுகிறார்கள். திரவிடரோடு அஃதாவது தமிழரோடு நாம் தொடர்பு கொள்வதாயி ருந்தால் அது மிகவும் இழிவு என்று அந்த மேனாட்டார்களில் சிலர் கருதுகிறார்கள். சமசுக்கிருதம் என்றாலோ பிராமணர்கள் என்றாலோ, "அவர்கள் நம்முடைய இனத்தார்; நமக்கு இனமான ஒரு மொழியைப் பேசுகிறவர்கள்" என்று அவர்களுடன் தொடர்பு கொள்வதைப் பெருமை யாகக் கருதுகிறார்கள். அதைக் கூட ஒரு காலத்தில், அஃதாவது மாக்சுமில்லர் காலத்திலே, அவர்கள் அந்தக்