பக்கம் எண் :

தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு59

கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் ஆரியர்கள் மேனாட்டார் களைத் தம் சொந்த இனத்தார் என்று கூறி அவர்களைச் சரிப்படுத்தி வைத்துக்கொண்டனர். இப்பொழுது சமசுக்கிருதம்தான் மேலை ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் மூலம் என்று அவர்கள் நன்றாக உறுதியாக நம்புகிறார்கள். நீங்கள் 1970ஆம் ஆண்டிலே வெளியான "பிரித்தானிய கலைக்களஞ்சியம்" (Encyclopeadia Brittanica) என்கிற நூலை ஒருமுறை பாருங்கள். அதிலே அமெரிக்கப் பதிப்பைப் பார்த்தீர் களானால், இந்த இந்தியா படம் எங்கெங்கு வருகின்றதோ அங்கெல்லாம் கரியைப் பூசி வைத்திருக்கிறார்கள். "முகத்திலே கரியைப் பூசி விட்டான்" என்று நாம்கூடச் சொல்லுகின்றோமே அந்தச் சொற்படியும் பொருள் படியும் அது சரியாக விருக்கின்றது. அந்த Demigration என்பது அதிலே மிகப் பொருத்தம். வெபுசுடர் பேரகர முதலி (Webster Dictionary) என்று ஓர் அமெரிக்கப் பதிப்பு உளது. அதிலும் அப்படியே செய்தி ருக்கின்றனர். இந்தப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் இருபத்து நான்கு மடலம். மூவாயிரம் உருபா. அதில் பிற்பகுதியிலே நிலப் படங்களை யெல்லாம் காட்டியிருக்கின்றனர். அவற்றில்தான் இந்தியப் பகுதியை மட்டும், அது பெரிய படமாக விருந்தாலும் சரி, சிறிய படமாகவிருந் தாலுஞ் சரி முழுவதும் கரியைப் பூசி வைத்து விட்டார்கள். ஆனால் பாக்கித்தான் பகுதிகளை மட்டும் நன்றாக மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இந்நிலை எதனாலே என்றால், இந்த எல்லைச் சச்சரவு (சச்சரவு என்பதைத் தகராறு என்று சொல்வோம்; அஃது உருதுச்சொல்; எனவே அதை விட்டுவிட வேண்டும்) ஏற்பட்டதே அப்பொழுது அவர்கள் பாக்கித்தானியர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக, அப்படிச் செய்ததாகத் தெரிகிறது. இது தவிர அதற்கு வேறு ஒரு கரணியம் இருப்பதாக உய்த்துணர முடியவில்லை. இப்படிச் செய்ததனால் இந்தியர் அனை வரையுமே இழிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையை வைத்துப்பார்க்கும் பொழுது தமிழர்களைப்பற்றி அவர்கள் தாழ்வாக மதிக்கின்றார்கள் என்று சொன்னால் அதில் வியப்பதற்கு இடமில்லை.

இவ்வாறுதான் மாந்தத் தோற்றவரலாறும் மறைக்கப்பட்டு இருக்கிறது. மாந்தன் தோன்றியது மேனாட்டிலே உள்ள ஏதேன் தோட்டத்திலேதான் என்று கிறித்துவர்களின் திருப்பொத்தகம் என்னும் பைபிளிலே சொல்லப் பெற்றிருக்கின்றது. அதைத்தான் மேனாட்டார்கள் நம்புகிறார்கள். இதற்கு நாம் இப்பொழுது ஒரு புது விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. உண்மையானது எத்தனைக் காலமானாலும் அல்லது எத்தனைத் தடைகள் இருந்தாலும் எப்படியாகிலும் வெளிப்படத்தான் செய்யும் Oil and truth get upper most at last - என்பது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி. எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும். ஆகவே நாம் முனைய வேண்டியது இன்றியமை யாததாகின்றது. ஓர் உண்மையான ஆராய்ச்சியாளருக்கு ஆறு