|
தகுதிகள் அமைய வேண்டும். கூர்மதி,
பரந்தகல்வி இந்த இரண்டும் எல்லாருக்கும்
பொதுவாக இருக்கின்றன என்றுகூட சொல்லிவிடலாம்.
ஆனால் மற்ற நான்கு தகுதிகளாகிய நடுநிலை,
அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா என்பவை
மிக இன்றியமையாதவை. இவையில்லா விட்டால்
ஒருவன் ஆராயவும் முடியாது; உண்மையை அறியவும் முடியாது.
யாரைக் கண்டாலும் எங்கு அமைச்சருக்கு மாறாகப்
போய் விடுமோ எந்த மேலதிகாரிக்காகிலும்
வருத்தம் உண்டாகி விடுமோ அல்லது ஓர்
இனத்தாருடைய பகையைத் தேடிக்கொள்ளும்படி
நேர்ந்து விடுமோ மேலும் மேலும் நம் பதவி உயர
வேண்டும்; பணம் தொகுக்க வேண்டுமே - என்றெல்லாம்
கருதினால் ஒருவன் உண்மை யான ஆராய்ச்சியாளனாக
விருக்க முடியாது.
இந்தக் குமரிநாட்டு வரலாற்றை
ஒப்புக்கொள்ளுகின்றதென்றால் அஃது ஓர் எளிய
செய்தியன்று. ஆனால் அஃது உண்மை. உண்மையை
ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். காட்சி, கருத்து,
ஒப்பு, உரை என்று நால்வகை அளவைகளைச்
சொல்லியிருக்கின்றார்கள். அவற் றுள்ளே
இப்பொழுது காட்சியை நாம் காண முடியாது என்று
சொன்னேன். ஏனென்றால் தெற்கே இருந்த குமரி நாடு
இப்பொழுது கடலில் முழுகிக் கிடக்கின்றது. அவ்வாறு
முழுகிக் கிடக்கின்ற நாடு முழுவதும் பாண்டியநாடு
என்பதை நீங்கள் அறிய வேண்டும். அது தமிழ் நாடு
மட்டுமன்று; அது பாண்டியநாடு. இந்தக் குமரி முனையிலி
ருந்து ஒரு கோடு வடக்கே இழுக்கப்பட்டால்
கீழ்ப்பகுதியெல்லாம் சோழ நாடு,
மேற்குப்பகுதியெல்லாம் சேரநாடு. தெற்கே
முழுகிப்போன நிலம் முழுமையும் பாண்டி நாடு. அந்தப்
பாண்டி நாடு முழுகிப்போன பின்னர்தான், அந்தக்
கடல்கோளுக்குத் தப்பிய பாண்டியர்கள் இந்தச்
சேரநாட்டின் ஒரு பகுதியையும் சோழ நாட்டின் ஒரு
பகுதியையும் கைப்பற்றித் தங்களுடைய குடிகளுக்குக்
கொடுத்தார்கள் என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரையில் வரைந்திருக்கிறார்.
கருத்து (அளவை) என்பது உய்த்துணர்வது. ஒருவனைப்
பார்த்து "உன்னுடைய பாட்டனுடைய பாட்டன் (அவனுக்கு
ஓட்டன் அல்லாது சேயான் என்று பெயர். இந்தப்
பகுதியில் ஓட்டன் என்று சொல்வார்கள்;
திருநெல்வேலிப் பகுதியில் சேயான் என்ற
சொல் வழக்கிலிருக்கின்றது. அதைப் படியாதவர்கள்
ஜீயான் என்பார்கள். "உங்கள் ஜீயான்
காலத்திலே கூட இது இல்லையே" என்பார்கள். அவனையே
எடுத்துக் கொள்வோம். அவனுக்கு முந்தினவனைக்கூட
வேண்டாம்.) இருந்தானா? என்று கேட்டால், அவன்
என்ன சொல்லுவான். "இருந்தான்" என்பான். உடனே,
"நீ அவனைக் கண்டாயா" என்று கேட்டால் என்ன
சொல்லுவான். "நான் காணவில்லை" என்பான்.
"அப்படியானால் அவனை நீ காணாம லேயே அவன்
இருந்தான் என்று எப்படிச் சொல்லலாம்"
சொல்லலாமா? அப்படிச் சொல்லுகிறார்கள்.
|